Tamilnadu Police Recruitment 2025

தமிழ்நாடு காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு – Tamilnadu Police Recruitment 2025

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு – Tamilnadu Police Recruitment 2025

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான நேரடி தேர்வு 2025 – க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை (Online Application) வரவேற்கப்படுகிறது.

Tamilnadu Police Recruitment 2025 Notification

பணியின் பெயர்: தமிழ்நாடு காவல் சார் நிலைப்பணி

காலிப்பணியிடங்கள்: 1352 (1299 + 53) 

1. பதவியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (தாலுக்கா)

காலியிடங்கள்: 933 ( ஆண்கள் – 654, பெண்கள் – 279)

2. பதவியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை)

காலியிடங்கள்: 366 ( ஆண்கள் – 255, பெண்கள் -111)

மொத்த காலிப்பணியிடங்கள் – 1299 (ஆண்கள் – 909, பெண்கள் – 380)

Tamilnadu Police Recruitment 2025

சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா) பதவிகளுக்கான 53 பற்றாக்குறை பணியிடங்களின் விவரம்.

3. பதவியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (தாலுக்கா)

காலியிடங்கள்: 53 ( ஆண்கள் – 37, பெண்கள் – 16)

  1. ஆதிதிராவிடர் வகுப்பினர் – 10 (ஆண்கள் – 7, பெண்கள் – 3)
  2. பழங்குடியின வகுப்பினர் – 43 (ஆண்கள் – 30, பெண்கள் – 13)

குறிப்பு :

  1. தேர்வு செய்ய தகுதியான பெண் விண்ணப்பதார்கள் இல்லாதபட்சத்தில்  தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் அக்காலிப்பணியிடங்களை அதே வகுப்பினரைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களக் கொண்டு நிரப்பப்படும்.
  2. பற்றாக்குறை பணியிடங்களுக்கு துறை ஒதுக்கீடு விளையாட்டுக்கான ஒதுக்கீடு, சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கான ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை பொருந்தாது.

Tamilnadu Police Recruitment 2025

சம்பளவிகிதம்: ரூ. 36,900 – 1,16,600 /-

கல்வித்தகுதி:

  1. பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்திடமிருந்து அறிவிக்கை தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. இளங்கலைப்பட்டம் கீழ்காணும் முறையில் கண்டிப்பான பெற்றிருக்க வேண்டும்.
  3. பள்ளியிறுதித் தேர்வு 10- ம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி +2 -ம் வகுப்பு தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பின்னர் (10+2+3/4/5) முறையில் பெற்றிருக்க வேண்டும்.
  4. பள்ளியிறுதி தேர்வு (10 – ம் வகுப்பு ) மற்றும் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்ற பின்னர் (10+3+2/ 10+3+3) முறையில் பெற்றிருக்க வேண்டும்.
  5. பள்ளியிறுதி தேர்வு மற்றும் இரண்டாண்டு தொழில்நுட்ப பயிற்சியில் (I.T.I) தேர்ச்சி பெற்ற பின்னர் 10+2+3 முறையில் பெற்றிருக்க வேண்டும்.
  6. இளங்கலைப்பட்டம், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் / தொலைதூரக் கல்வி / கல்லூரி மூலமாகப் பெற்றிக்கலாம். இருப்பினும் மேற்கூறிய முறையில் அல்லாமல் நேரடியாக திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.

குறிப்பு : விண்ணப்தாரர்கள் பள்ளிக்கல்வியில் ஒன்பதாம் வகுப்பு படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது பதினொன்றாம் வகுப்பு படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலோ விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

Tamilnadu Police Recruitment 2025

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 30 வயது நிறைவு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும் (02.07.1995 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும் மற்றும் 01.07.2005 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும்) சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கீழ்க்கண்டவாறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

உட்ச வயதுவரம்பு :

  1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரப்பினர்  – 32 வருடங்கள்
  2. ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் – 35 வருடங்கள்
  3. திருநங்கை – 35 வருடங்கள்.
  4. ஆதரவற்ற விதவை – 37 வருடங்கள்
  5. முன்னாள் இராணுத்தினர்கள் / முன்னாள் மத்திய காவல்ஆயுதப்படையினர் (CAPF) – 47 வருடங்கள்.
  6. 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் – 47 வருடங்கள் (01.07.2024 அன்று).

குறிப்பு : மேலும் விவரங்களுக்கு – Click Here 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : –

  1. எழுத்து தேர்வு 
  2. சான்றிதழ் சரிப்பார்த்தல் 
  3. உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்திறன் போட்டி
  4. உடல் உறுதி தேர்வு
  5. நேர்முகத் தேர்வு

Tamilnadu police recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை : 

  1. விண்ணப்பத்தாரர்கள் TNUSRB -ன் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.tnusrb.tn.gov.in – ல் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலான / வடிவிலான விண்ணப்பம் உறுதியாக நிராகரிக்கப்படும்.
  2. விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணை இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பயன்படுத்தப்பட வேண்டும். இவை முழு விண்ணப்ப செயல்முறை / தேர்வு நடைமுறைக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். 
  3. இணையவழி விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்க வழக்கங்கள் சரிபார்ப்புக்கான தனது முகவரி வரம்பிற்கு உட்பட்ட காவல் நிலையத்தை குறிப்பிட வேண்டும். 
  4. விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது தந்தை / தாய் / பாதுகாவலர் ஆகியோரில் ஒருவரின் பெயரை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஆனால் மூன்று களத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
  5. தேர்வுகளின் பல்வேறு நிலைகளில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கூட நுழைவுச்சீட்டு / அழைப்பு கடிதங்களை TNUSRB – ன் அதிகாரபூர்வ இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிற்கம் செய்து கண்டிப்பாக வண்ண அச்சிட்டில் (Color Print) எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தபால் மூலமாக தேர்வு கூட நுழைவு சீட்டு / அழைப்பு கடிதங்கள் வழங்கப்படமாட்டாது.
  6. பொது மற்றும் துறை ஆகிய இரண்டு ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பிக்க தகுதியுடைய துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள், தனித்தனியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நெடுவரிசையில் “BOTH” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  7. விண்ணப்பதாரரின் இடது கை கட்டை விரல் ரேகை பிம்பத்தை (Image) இணையவழி விண்ணப்பத்தின் ஆவண பதிவேற்ற பிரிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  8. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பத்தில் பின்வரும் அ) பெயர் ஆ) விருப்பமான எழுத்துத்தேர்வு மையம் இ) கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி புலங்களை தவிர பிற புலங்களை 04.05.2025 முதல் 13.05.2025 வரை திருத்தம் செய்யலாம்.
  9. விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் 13.05.2025 -க்கு பிறகு எந்த வித திருத்தமும் செய்ய அனுமதிக்க முடியாது.

Tamilnadu police recruitment 2025

தேர்வுக் கட்டணம் : 

  1. பொது அல்லது துறை ஒதுக்கீட்டுக்கான தேர்வு கட்டணம் – ரூ. 500 /-
  2. துறை விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்கு பெற விண்ணப்பித்தால் தேர்வு கட்டணம் – ரூ. 1000/-
  3. தேர்வு கட்டணத்தை Online – மூலம் செலுத்த இயலும்.

Important Dates:

Starting Date for Submission of Application: 07.04.2025

Last Date for Submission of Application: 03.05.2025

Tamilnadu police recruitment 2025

Official Notification & Application Link:

Official Careers Website: Click Here
Official Notification in Tamil PDF: Click Here
Apply Online Application: Click Here
SI Syllabus For Written Examination: Click Here 

 

TNPSC Group – IV & II / II – A Important Questions

 

Join Our Whatsapp Group: Click here

Our Youtube Channel: Click here

Join Our Telegram Group: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

Central Government Jobs

TamilNadu Government Jobs

Railway Jobs

Bank Jobs