தருமபுரி மாவட்டம் கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில் வேலைவாய்ப்பு – Dharmapuri ration shop recruitment 2024
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Dharmapuri ration shop recruitment 2024
1. பணியின் பெயர் : விற்பனையாளர் (Salesman)
காலியிடங்கள் : 58
கூட்டுறவு நிறுவனத்தின் பெயர்கள்:
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – 54
- மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கம் – 2
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் – 2
இனச்சுழற்சி (வகுப்புவாரி இடஒதுக்கீடு) :
- பொது (GT) – 18
- பிற்படுத்தப்பட்டோர் (BC) – 15
- பிற்படுத்தப்பட்டோர் BC(M) – 2
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (MBC / DNC) – 11
- ஆதிதிராவிடர் (SC) – 9
- ஆதிதிராவிடர் SC(A) – 2
- பழங்குடியினர் ST – 1
dharmapuri ration shop recruitment 2024
சம்பளவிகிதம் :
- ரூ. 6,250 /- (ஓராண்டு வரை)
- ரூ. 8,600 – 29,000/- (ஓராண்டு பிறகு)
வயதுவரம்பு : பொது வகுப்பினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் BC / MBC, SC / ST பிரிவினருக்கு வயதுவரம்பு தேவையில்லை.
கல்வித்தகுதி : 12 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tamilnadu ration shop jobs Recruitment 2024
உடற்தகுதி சான்றிதழ் :
- தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களது குறைபாடு தாங்கள் தேர்வு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ் மொழித்திறன் :
- விண்ணப்பதாரர் இந்த அறிவிப்பு வெளியிடும் நாளன்று தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
dharmapuri ration shop recruitment 2024
Selection process in TN ration shop recruitment 2024
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
- விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பும், நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ்வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்கள். தேர்வு செய்யப்பட்டப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்குக் கட்டாயமாக நேரில் வருகை புரிய வேண்டும். நேர்முகத்தேர்விற்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்டார்கள். இது தொடர்பாக எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து உரிமை கோர இயலாது.
- விண்ணப்பதாரர்கள் சங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது அதிக மொத்த மதிப்பெண் பெற்றவர்கள் இனச்சுழற்சியைப் பின்பற்றி அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்த சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவர். குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இனச்சுழற்சி அடிப்படையில் அவர்கள் விரும்பிய சங்கத்திற்கு ஒதுக்கீடு கிடைக்காமல் போகலாம். அத்தகைய நேர்வில் அந்தச் சமயத்தில் அவர்களது இனச்சுழற்சிற்கு எந்தச் சங்கத்தில் காலிப்பணியிடம் இருக்கிறதோ அந்தச் சங்கத்திற்கு அவர் ஒதுக்கீடு செய்யப்படுவர்.
- விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்து சான்றிதழ்களையும் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னரே தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.
- மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தேர்வு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை (Selection and allotment order) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும். அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கத்தின் தகைமை வாய்ந்த அலுவலரால் பணியமர்வு ஆணை (Appointment Order) வழங்கப்படும்
- முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு முறை பொருந்தாது.
dharmapuri ration shop recruitment 2024
Application Fee / Exam Fee for TN drb ration shop jobs 2024
விண்ணப்பக் கட்டணம் :
- விற்பனையாளர் (Salesman) விண்ணப்பக் கட்டணம் ரூ. 150/- மற்றும் கட்டுநர் (Packer) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 /- ஆகும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்தினாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிமிடருந்து சான்றிதழம் மருத்துவச்சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
- முன்னாள் இராணுவத்தினரைப் பொறுத்தவரை முதல் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையவில்லை.
- விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இணையவழி கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கும் தோல்விகளுக்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
- கட்டணம் செலுத்தும் முறையை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்கும் உரிமை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உண்டு.
- ஒரு முறை செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி தரப்படமட்டாது.
dharmapuri ration shop recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் www.drbdharmapuri.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தாரரின் புகைப்படம் – 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).
- விண்ணப்பத்தாரரின் கையெழுத்து – 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).
- விண்ணப்பத்தாரரின் சாதி சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF format).
- நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF format).
- குடும்ப அட்டை – 200 kb அளவுக்கு மிகாமல் (PDF File) அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Pdf File).
- மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- ஆதவரற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- ஏற்கனவே 2020 – ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்த முறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File).
- தமிழ் மொழியில் படித்தவர் எனில் தமிழ் மொழியில் பயின்றதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).
- முன்னுரிமை கோரும் இனத்திற்கான / இனங்களுக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (Pdf File)
- விண்ணப்பிக்கும் முறை குறித்து ஏதேனும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbdharmapuri@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தர்மபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அலுவலக நேரத்தில் தொடர்புக் கொள்ளவும்.
உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண் : 04342 – 234141, 04342 – 233803.
dharmapuri ration shop recruitment 2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2024 (மாலை 5.45 மணிக்குள்)
Official Notification PDF : Click Here
Online Application : Click Here
dharmapuri ration shop recruitment 2024
நேர்முகத்தேர்வு :
- தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகத்தேர்வு அந்தத்த மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும். நேர்முகத்தேர்விற்கு அழைப்புக் கடிதம் பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் தங்கள் சொந்த செலவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்
- நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்கள் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.
- நேர்முகத்தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (EMail) / குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத்தேர்விற்கான அழைப்புக் கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அழைப்புக் கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பு (weightage for academic marks) மற்றும் நேர்முகத்தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50:50 என்ற விகிதத்தில் இருக்கும்.
dharmapuri ration shop recruitment 2024
நிபந்தனைகள் :
- மேற்படி பதவிகளுக்கான நேரடி நியமனத்தின் போது அரசுப் பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறையில் நியமனக்கப்படும்.
- இத்தெரிவுக்கு நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சிமுறை ஒட்டுமொத்த நியமனத்திற்கும் பின்பற்றபடும்.
- அரசாணை (நிலை) எண். 122 மனிதவள மேலாண்மைத் துறை நாள் 02.11.2021 ன் படி முன்னுரிமை பின்பற்றப்படும்.
- மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் பெண்கள், ஆதவரற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர், தமிழ் வழியில் பயின்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற இனங்கள் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு விதிகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகளின் படி பின்பற்றப்படும்.
- மேற்படி சம்பளவிகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும்.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தெரிவு முற்றிலும் தற்காலிகமானதே.
- மேற்படி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் இத்தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும். அதற்குப் பின்னர் பெறப்படும் மேல்முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here