ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு – TN Anganwadi Recruitment 2025
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், 7783 அங்கன்வாடி ஊழியர்களின் நேரடி பணிநியமனத்திற்கு ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசாணை வெளீயிடு.
TN Anganwadi Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: அங்கன்வாடி பணியாளர்
காலியிடங்கள்: 3886
சம்பளவிகிதம்: ரூ. 7700 – 24200/-
வயதுவரம்பு: 25 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் (விதவை / ஆதரவற்ற பெண்கள் / SC / ST ) – பிரிவினருக்கு 40 வயதிற்குளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்
காலியிடங்கள்: 305
சம்பளவிகிதம்: ரூ. 5700 – 18000/-
வயதுவரம்பு: 25 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / Widow, Destitute Widow ஆகியவர்களுக்கு (20 – 40) வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்
காலியிடங்கள்: 3592
சம்பளவிகிதம்: ரூ. 4100 – 12500/-
வயதுவரம்பு: 20 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / Widow, Destitute Widow ஆகியவர்களுக்கு (20 – 45) வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் (Block/project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
- விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 – ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
- விதவை, கணவரால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.
- நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- விண்ணப்பங்களை தபால் / அஞ்சல் மூலம் வட்டார திட்ட அலுவலகத்திற்கு அனுப்பும் போது ஏற்படும் காலதாமங்களுக்கு துறை பொறுப்பாகாது.
- பத்திரிக்கை செய்தி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பின்னர் வட்டார திட்ட அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
Important Dates:
Starting Date for Submission of Application: 07.04.2025
Last Date for Submission of Application: 23.04.2025
TN Anganwadi Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Application Form for Anganwadi Worker PDF: Click Here
Application Form for Anganwadi Helper PDF: Click Here
Application Form for Mini Anganwadi Worker PDF: Click Here
CDPO Address PDF: Click Here
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here