தமிழ்நாடு மீன்வள உதவியாளர் & இந்து சமய அறநிலை துறையில் பணிகள் -tn govt jobs 2021

tn jobs

1. தமிழ்நாடு மீன்வள உதவியாளர் பணிகள் : – 

ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் (tn govt jobs) காலியாக உள்ள மீன் வள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : மீன் வள உதவியாளர்

காலியிடங்கள் : 5

வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடங்கள் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத்துறை பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதை பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்பவும் அல்லது நேரில் கொண்டு சேர்க்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,

உதவி இயக்குநர் அலுவலகம்,

சுப்புராம் காம்ப்ளக்ஸ்,

2  – வது தளம், 

கலெக்டர் அலுவலகம் அருகில்,

ஈரோடு – 638 011.

 

கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பம் பெற  adferode1@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.

 

2. இந்து சமய அறநிலைத் துறையில் டாக்டர் மற்றும் நர்ஸ் பணிகள் : –

இந்து சமய அறநிலைத் துறையில் உள்ள திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 75,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் TNMSE – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : General Nursing & Midwifery – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 6,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :     www.hrce.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

சமயபுரம்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 112.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

Test Your Knowledge and Value It

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்