தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு – tn police si recruitment 2023
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு (இந்திய குடியுரிமையுடையவர்கள் மட்டும்) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.TN Police SI Job Notification 2023
1. பணியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா)
காலியிடங்கள் : 364 +2 (பி.கா)
(ஆண்கள் – 255 + 2 (பி.கா), பெண்கள் – 109)
2. பணியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை)
காலியிடங்கள் : 141 + 4(பி.கா)
(ஆண்கள் – 99 + 3 (பி.கா), பெண்கள் – 42 + 1(பி.கா))
3. பணியின் பெயர் : காவல் சார்பு ஆய்வாளர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
காலியிடங்கள் : 110 (ஆண்கள் மட்டும்)
4. பணியின் பெயர் : நிலைய அதிகாரி (தமிழ்நாடு தீயணைப்புத் துறை )
காலியிடங்கள் : 128 + 1 (பி.கா)
(ஆண்கள் – 90, பெண்கள் – 38 + 1 (பி.கா))
பி.கா – பின்னடைவு காலிப்பணியிடங்கள்
சம்பள விகிதம் :
(i) காவல் சார்பு ஆய்வாளர் : ரூ. 36,900 – 1,16,600
(ii) நிலைய அதிகாரி (தமிழ்நாடு தீயணைப்பு துறை) : ரூ. 36,400 – 1,15,700
வயதுவரம்பு : 01.07.2023 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் BC / MBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், SC / ST / திருநங்கைகள் பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு 7 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தார்கள் பல்கலைக்கழக மானிய குழு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து / கல்வி நிறுவனங்களிலிருந்து (10+2+3/4/5) என்ற முறையில் பெற்ற இளங்கலை பட்டம் அல்லது (10+3+2/2) என்ற முறையில் பட்டயப்படிப்பு படித்த பின்னர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆனால் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், மேற்கண்ட முறையில் இளங்கலைப் பட்டம் பெறாமலிருந்தால் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
TNUSRB SI Notification 2023
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM) : பொது விண்ணப்பதாரர்கள் 1 முதல் 12 வகுப்பு வரை மற்றும் இளங்கலைப் பட்டம் முழுவதுமாக தமிழ்வழியில் பயின்றிருந்தால் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20% முன்னுரிமை அளிக்கப்படும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இம்முன்னுரிமை பொருந்தாதது.
Selection process in TN Police SI Recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்கள். அவை,
- எழுத்துத் தேர்வு
- சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதித் தேர்வுகள்
- நேர்காணல் தேர்வு
- சிறப்பு மதிப்பெண்கள் (தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுகள்)
TNUSRB SI Recruitment 2023
தேர்வுக் கட்டணம் :
- விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.500/- ஐ செலுத்த வேண்டும். காவல்துறை விண்ணப்பத்தாரர்கள், பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்குபெற விண்ணப்பித்தால் தேர்வுக் கட்டணம் ரூ. 1000/- ஐ செலுத்த வேண்டும்.
- தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் (Net-Banking / UPI / Credit Card / Debit Card ) மற்றும் SBI வங்கியில் மூலமாகவோ செலுத்தலாம்.
How to Apply for TamilNadu Police SI Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபால் மூலமாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது.
Tamilnadu Police SI Recruitment 2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2023
TNUSRB Police SI Recruitment 2023
Official Website Career page: Click Here
காவல் சார்பு ஆய்வாளர் Official Notification PDF: Click Here
தீயணைப்பு & மீட்பு துறை Official Notification PDF: Click Here
tnusrb Recruitment 2023
Syllabus PDF: Click Here
Model Questions :
(i) தமிழ் மொழி தகுதி தேர்வு Model Questions PDF: Click Here
(ii) பொது அறிவு தேர்வு Model Questions PDF: Click Here
(iii) உளவியல் தேர்வு Model Questions PDF: Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here