Tnpsc group 2 question paper – TNPSC தமிழ் இலக்கியம்

current affairs january 2022

TNPSC Group -II / IV தேர்விற்கான தமிழ் இலக்கியம் – tnpsc group 2 question paper 

சிலப்பதிகாரம் : –

சிலப்பதிகாரம் பற்றிய முழு தகவல்கள் கொண்ட தொகுப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வில் (tnpsc group 2 question paper) சிலப்பதிகாரம் பற்றிய கேட்கப்படும் கேள்விகள் முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.

tnpsc group 2 question paper

ஆசிரியர் : இளங்கோவடிகள்

பெற்றோர்கள் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – நற்சோணை

தமையன் : சேரன் செங்குட்டுவன்

ஊர் : சேர நாடு

காலம் : கி.பி 2 -ம் நூற்றாண்டு

சமயம் : சமணம்

சமகாலத்தவர் : சீத்தலைச் சாத்தனார்

சிறப்புப் பெயர் : சமய வேறுபாடு கருதா துறவி

வரிகள் : 5001 வரி- இசைப்பாட்டு

 

 சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். சிலம்பால் அதிகரித்த வரலாறு.

*   சிலம்பதிகாரம் மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளும் கொண்டது.

*  புகார்காண்டம் – 10 காதைகள் (மங்கலவாழ்த்து காதை – நாடுகாண் காதை)

*   மதுரைக்காண்டம் – 13 காதைகள் (காடுகாண் காதை – கட்டுரைக் காதை)

*  வஞ்சிக்காண்டம் – 7 காதைகள் (குன்றக்குரவை காதை – வரந்தகு காதை)

 

*  சிலப்பதிகாரம் வேறு பெயர்கள் :

tnpsc group 2 question paper

1.  உரையிட்டப்பட்ட பாட்டுரைச் செய்யுள்

2. முத்தமிழ் காப்பியம்

3. முதற்காப்பியம்

4. ஒற்றுமைக் காப்பியம்

5. குடிமக்கள் காப்பியம்

6. நாடகக் காப்பியம்

7. இரட்டைக் காப்பியம்

8. புரட்சிக் காப்பியம்

 

* பைந்தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகள்

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”

“உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்”

*  காலத்தாலும், கதைத் தொடர்பாலும் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என வழங்குவர்.

* “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக”  என்று கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.

* நாட்டுதும் யாமோர் பாட்டுரைச் செய்யுள் என்று கூறியவர் இளங்கோவடிகள்

*  தலைக் கோலரிவை பட்டம் பெற்றவர் மாதவி.

* யாரையோ நீ மடக்கொடி என கண்ணகியை கேட்டவன் பாண்டியன்

* பிடர்தலை பீடம் ஏறிய மடக்கொடி என கொற்றவையுடன் கண்ணகியை ஒப்பிட்டு கூறியவன் வாயில் காவலன்.

* மடமொழி எனப்படுபவள் கோப்பெருந்தேவி (கொம்பினை ஒத்த மடப்பிடி : பாஞ்சாலி. கூறியவர் திருதராட்டிரன்)

*  பாவின வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்.

* இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்.

* இந்நூலக்கு உரை எழுதியவர் இருவர். அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.

* மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்.

*  சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவாலும், கொச்சகக்கலிப்பாவாலும் ஆனது.

* “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாரதியார் போற்றியுள்ளார்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என இளங்கோடிகளைப் புகழ்கிறார் பாரதியார்

tnpsc group 2 question paper

*  தேனிலே ஊறிய சுவை தேறும் சிலப்பதிகாரம் என கவிமணி போற்றியுள்ளார்.

*  தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோ எனக் கூறியவர் –  மு.வ 

ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.

பெண்ணுக்கு பெருமை தரும் முதல் காப்பியம் 

கோவலனின் நகரம் புகார்

* கோவலினின் தந்தை மாசாத்துவான்.

*  கண்ணிகியின் தந்தை மாநாய்கன்.

மாதவியின் தாய் சித்திராபதி

*  கோவலன் – மாதவியின் மகள் மணிமேகலை

*  பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி

கண்ணகியின் தோழி தேவந்தி

*  மாதவியின் தோழி வயந்தமாலை.

மணிமேகலையின் தோழி சுதமதி

*  மாதவி 11 வகை ஆடல் கற்றவள்

*  கோவலனின் நண்பன் மாடலன்

கோவலனை மீண்டும் வரச்சொல்லி மாதவி தனது முதல் கடிகத்தை வயந்தமாலையிடம் கொடுத்து அனுப்பினாள்.

இரண்டாவது கடிதத்தை கோவலனிடம் கொடுத்தவன் கோசிகாமணி.

கோவலன்-கண்ணகியை மதுரைக்கு அழைத்துச் சென்றவர் கவுந்தியடிகள் என்ற பெண் துறவி.

இவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்தவர் மாதிரி (ஆய்ச்சியர்)

மாதரியின் மகள் ஐயை

tnpsc group 2 question paper

கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது.

கோப்பெருந்தேவியின் காற்சிலம்பு முத்துப்பரல்களை உடையது.

கோவலனை கள்வன் எனக் கூறியவன் – பொற்கொல்லன்.

இந்திர விழா மழைக்கடவுளான இந்திரனை வேண்டி 28 நாட்கள் நடைபெறும்.

சிலப்பதிகாரத்தில் 5 வகை மன்றங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தெய்வமன்றம், இலஞ்சி மன்றம், வெள் இடைமன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம்.

வரி என்றால் இசைப்பாடல் என்று பொருள். வரி எட்டு வகைப்படும்.

வேட்டுவ வரியில் பாடப்படும் கடவுள் – காளி

ஆய்ச்சியர் குரவையில் பாடப்படும் கடவுள் – கண்ணன்

பந்தடித்து விளையாடும் போது பாடுவது – கந்துக வரி.

ஊஞ்சலாடும் போது பாடுவது – ஊசல் வரி

 நெல்குற்றும் போது பாடுவது – வள்ளைப்பாட்டு

 கழங்காட்டத்தின் போது பாடுவது – அம்மானை வரி

 ஊசல் வரியில் பாடப்படுவன் – சேரன்

 அம்மானை வரியில் பாடப்படுவன் – பாண்டியன்

 முல்லை நில மக்கள் நிகழ்த்தும் கூத்து – ஆய்ச்சியர் குரவை.

 குறிஞ்சி நில மக்கள் நிகழ்த்ததும் கூத்து – குன்றக் குரவை

 குரவை என்பது 7 முதல் 9 பேர் கைகோத்து ஆடுவது

 வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப்பாட்டு

 கண்ணகிக்கு கோயில் கட்டியவன் – சேரன் செங்குட்டுவன்

கண்ணகிக்கு சிலை அமைக்க கல் எடுத்த மலை – இமயமலை

இந்திரவிழா குறித்துக் கூறும் நூல் – சிலப்பதிகாரம், மணிமேகலை

நாட்டுப்புறப் பாடல்களுக்கு முதன்மை கொடுத்து முதன் முதலில் பாடியவர் – இளங்கோவடிகள்

11 வகை ஆடல் : அல்லி, கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லாடல், துடியாடல், கடையம், பேடு, மரக்கால், பாவைக்கூத்து.

திருமகள் ஆடியது – பாவையாடல்

சிவன் ஆடியது – பாண்டரங்கம் 

முருகன் ஆடியது – துடி

யாழ்கள் – பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்

மேற்கோள்கள் : 

tnpsc group 2 question paper

 

” பதிஎழு அறியாப் பண்புமேம் பட்ட

மதுரை மூதூர் மாநகர் கண்டு”

 

“கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்

ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்”

 

” முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்தப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”

 

” பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

 

“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி”

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.