தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 -(TNSTC Recruitment 2025)
தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
TNSTC Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: ஓட்டுநர் உடன் நடந்துநர்
மொத்த காலியிடங்கள்: 3274
i) மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை – 364
ii) அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு)வரையறுக்கப்பட்டது, சென்னை – 318
iii) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட் – 322
- விழுப்புரம் – 88
- வேலூர் – 50
- காஞ்சிபுரம் – 106
- கடலூர் – 41
- திருவண்ணாமலை – 37
iv) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் – 756
- கும்பகோணம் – 101
- நாகப்பட்டினம் – 136
- திருச்சி – 176
- காரைக்குடி – 185
- புதுக்கோட்டை – 110
- கரூர் – 48.
v) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட் – 486
- சேலம் – 382
- தர்மபுரி – 104
vi) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் – 344
- கோவை – 100
- ஈரோடு – 119
- ஊட்டி – 67
- திருப்பூர் – 58
vii) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் – 322
- மதுரை – 190
- திண்டுக்கல் – 60
- விருதுநகர் – 72
viii) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட் – 362
- திருநெல்வேலி – 139
- நாகர்கோவில் – 129
- தூத்துக்குடி – 94
இனசுழற்சி (நிறுவையில் உள்ள காலியிடங்கள் உட்பட்ட) (Backlog) : அரசு விதிமுறைகளின் படி நடைமுறைப்படுதல்.
TNSTC Recruitment 2025
குறைந்தபட்ச வயதுவரம்பு: 01.07.2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது (01.07.2025):
- பொது வகுப்பினர் (OC) – 40 வயது பூர்த்தியாகாமலும்,
- பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC / MBC / DNC / SC / ST ) – 45 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும்.
- முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) – 50 வயது பூர்த்தயாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC / MBC / DNC / SC / ST ) – 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
TNSTC Recruitment 2025
முக்கிய தகுதிகள் : செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம். முதலுதவி சான்று. பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025 – க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
உயரம் மற்றும் எடை :
- உயரம் குறைந்தபட்சம் – 160 செ.மீ
- எடை குறைந்தபட்சம் – 50 கீ.கிராம்.
உடல்தகுதி :
- தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண் பார்வை பெற்றிருக்க வேண்டும்.
- எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்.
TNSTC Recruitment 2025
விண்ணப்பக் கட்டணம் :
- SC / ST பிரிவினர் ரூ. 590 /- (18% GST உட்பட)
- இதர பிரிவினர் ரூ. 1180 /- (18% GST உட்பட)
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
- எழுத்துத்தேர்வு
- செய்முறை தேர்வு
- நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
TNSTC Recruitment 2025
நிபந்தனைகள் :
- சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.
- விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.
- இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது. தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு.
- சென்னை உயர்நீதிமன்ற W.P.No.20290 of 2012 நாள் 27.08.2014 மற்றும் W.A.No.1737 of 2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.
- தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனவே விண்ணப்பதார்ரகள் இத்தளத்தை அவ்வப்போது காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Important Dates:
Starting Date for Submission of Application: 21.03.2025
Last Date for Submission of Application: 21.04.2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications Tamil PDF: Click Here
Official Notifications English PDF: Click Here
Official Application PDF: Click Here
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here