Madras High Court Recruitment

தமிழ்நாடு வழக்கறிஞர் பணிக்கான TNPSC தேர்வு – advocate jobs 2021-22

தமிழ்நாட்டிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் (advocate jobs) காலியாக உள்ள Assistant Public Prosecutor பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:590,Notification No:10/2021

1. பணியின் பெயர் : Assistant Public Prosecutor Grade – II

காலியிடங்கள் : 50 

சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500

வயதுவரம்பு : பொது பிரிவினர்கள் 34 – க்குள் இருக்க வேண்டும். SC / ST / SCA / BC / MBC / DNC பிரிவினர்கள் மற்றும் அனைத்து ஜாதியையும் சேர்ந்த ஆதவரற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

மாற்று திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை தரப்படும்.முன்னாள் இராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.L படிப்பை முடித்து பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றத்தில் (Criminal Court) குறைந்தது 5 வருட வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தமிழில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

advocate jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : TNPSC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். முதற்கட்ட எழுத்துத்தேர்வு 6.11.2021 அன்று நடத்தப்படும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

பதிவு & தேர்வு கட்டணம் : பதிவு கட்டணம் ரூ. 150 .  முதல்நிலை தேர்வு கட்டணம் ரூ. 100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் கட்டவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnpsc.gov.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 24.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்