New India Assurance (NIACL) – ல் நிர்வாக அதிகாரிப் பணிகள் – 2021
New India Assurance நிறுவனத்தில் (NIACL) அதிகாரிப் பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
REF.No.CORP.HRM/AQ/2021
NIACL
1. பணியின் பெயர் : Administrative Officers (Generalist)
காலியிடங்கள் : 300 (UR-121, SC-46, ST-22, OBC-81, EWS-30)
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின்படி 21-லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ. 32,795 – 62,315
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.(NIACL)
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Phase – 1 Preliminary Exam மற்றும் Phase -2 Main Examination என இரண்டு முறையில் நடத்தப்படும்.
Preliminary Exam – ல் தகுதி பெற்றவர்கள் Main Exam – க்கு அழைக்கப்படுவர். Main Exam – ல் Objective மற்றும் Descriptive Test என இரண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் பார்க்கவும்.
Phase-1 – Preliminary Exam புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், சேலம் , தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் நடைபெறும்.
Main Exam தமிழ்நாட்டில் சென்னையில் வைத்து நடைபெறும்.
Phase – 1 தேர்வு அக்டோபர் மாதத்திலும் Phase -1 தேர்வு நவம்பர் மாதத்திலும் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100-ஐ கட்டணமாக செலுத்தவும்.
How to Apply for New India Assurance (NIACL) Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : https://newindia.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், இடதுகை பெருவிரல் ரேகை மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.9.2021.