Schorlership
சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகள் மூலம் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள், ST / PWD பிரிவினர், மூன்றாம் பாலினத்தனர் மற்றும் மீனவ சமுதாய மாணவ & மாணவியர்களுக்கு உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை (schorlership) வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் வருமாறு.
கல்வி உதவித்தொகையின் பெயர் : Chennai High Court Admin. General & Offical Trustee Scholarships ( Academic Year 2019-20 & 2020-21)
கல்வித்தகுதி :
1. மருத்துவம், பொறியியல் & தொழிற்நுட்பம், விவசாயம், துணை மருத்துவ படிப்புகள் அல்லது ஏதாவதொரு கலை & அறிவியல் பாடப்பிரிவில் தற்போது படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. ஏதாவதொரு பட்டப் படிப்புடன் UPSC – ஆல் நடத்தப்படும் Civil Service முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், திராவிட கலாச்சாரம், கட்டிடவியல், நாட்டுப்புற கலைகள், விலங்கியல், தாவரவியல், வனத்துறை, அறிவியல் பழங்குடியின வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்க வேண்டும். அல்லது ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து Ph.D பட்டம் பெற தகுதியானவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை (schorlership) :
1. பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.
2. UPSC – முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 1,50,000 மற்றும் தங்கப் பதக்கம்.
3. Ph.D மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.
இதர தகுதிகள் : விண்ணப்பதாரர்கள் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள், பழங்குடியின பள்ளிகள், வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகள் ஏதாவதொன்றில் தமிழ் வழியில் படித்து குறைந்தது. 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள படி சம்மந்தப்பட்ட கல்லூரி படிப்புகளில் அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தற்போது (2019, 2020, 2021) படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, தற்போது படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிகளின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ்களை நேர்முகத் தோ்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.districts.gov.in/chennai என்ற இணையதளத்தின் Latest Announcement பிரிவில் AG & OT Scholarship என்ற பகுதியை கிளிக் செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து 9.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Administrator General and Official Trustee Of Tamil Nadu,
High Court Campus,
Chennai – 600 104.
phone No.: 044 – 25342278.
2. திருச்சி NIT – ல் பல்வேறு பணிகள் – 2021
திருச்சி NIT – ல் Computer Science Engineering துறையில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள்
NITT/CSE/DST-SEED/2021
1. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000.
வயது வரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CSE / IT பாடப்பிரிவில் B.E / B.Tech.-ல் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வில் பெற்ற மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படும்.
2. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,000.
வயது வரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CSE / IT / ECE / EEE இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech.-ல் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Field Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 12,000.
வயது வரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CSE / IT / ECE / EEE பாடப்பிரிவில் B.E / B.Tech.-ல் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, ஸ்கேன் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். தபால் கவரின் மீது “Application-DST-SEED” என்று குறிப்பிடவும்.
E-MAIL ID : thirumathikarthitt@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.