தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலை :-
கரூர் மாவட்ட சுகாதார மையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் 11 மாதகால ஒப்பந்த அடிப்படையில் (medical recruitment) பணி புரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
medical recruitment
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் Internship முடித்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : மருத்தாளுனர் (Pharmacist -TB)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,000
கல்வித்தகுதி : Pharmacy பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,000
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Computer Operation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் மற்றும் வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
medical recruitment
4. பணியின் பெயர் : முதுநிலை காச நோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 15,000
கல்வித்தகுதி : Medical Laboratory Technology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Operation – ல் சான்றிதழ் மற்றும் இரு சக்கர வாகனம். வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : ஆய்வக நுட்புநர் (Lab Technician)
காலியிடம் : 5
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Medical Laboratory Technology -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : காச நோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Health Education / Counselling பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது Tuberculosis Health Visitor பயிற்சி பெற்றிருப்பதுடன் Computer Operators பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
medical recruitment
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் பயோடேட்டாவுடன் தற்போதைய புகைப்படம், கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு, கணினி சான்றிதழ், முன் அனுபவ சான்று மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் நகல் ஆகியவற்றை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். வயது 62 -க்குள்ளிருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். அனுப்பவும் தபால் உறையின் மேல் பதிவியின் பெயரை குறிப்பிட வேண்டும். மேலும் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
சர்ச் கார்னர் அருகில்,
கரூர் – 639 001.
தொலைபேசி : 04324 – 231760.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 11.11.2021.