மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறையின் கீழ் செயல்படும் (Bureau of India Standards) இந்திய தர நிர்ணய மைய நிறுவனத்தில் (bis recruitment) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
bis recruitment
1. பணியின் பெயர் : Personal Assistant
காலியிடங்கள் : 30
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 100 ஆங்கில வார்த்தைகள் என்ற அடிப்படையில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் அதை 45 நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Section Officer
காலியிடங்கள் : 47
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Assistant (CAD)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் B.Sc பட்டப்படிப்புடன் 5 வருட Auto CAD பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Civil / Mechanical / Electrical பாடப்பிரிவுகளில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 47
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical / Chemical / Microbiology போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன்ஜினிரியங் படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
bis recruitment
5. பணியின் பெயர் : Stenographer
காலியிடங்கள் : 22
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 27 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் பணி புரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதி அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விகிதத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Senior Secretariat Assistant
காலியிடங்கள் : 100
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 27 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் 15 நிமிடத்தில் 2000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Horticulture Supervisor
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 27 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தோட்டக்கலைத்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Senior Technician
காலியிடங்கள் : 25
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 27 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter / Welder / Plumber / Fitter / Tuner / Electrician போன்ற தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
bis recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் அட்டவணை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம் : ஜீன் 2022,
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை.
தேர்வு பற்றிய விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். ST / SC / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bis.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.5.2022
bis recruitment
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here