இந்திய உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு (sci vacancy) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
sci vacancy
பணியின் பெயர் : Court Assistant (Junior Translator)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 76,908
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST / OBC பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : ஆங்கிலம் மற்றும் தமிழை பாடமாக கொண்ட ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கும் மொழி பெயர்ப்பு செய்வதில் 2 வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : உச்சநீதிமன்ற தேர்வுக்குழுவால் நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் மொழிபெயர்த்தல் தொடர்பான கேள்விகள் இடம் பெறும்.
மேலும் விண்ணப்பதாரின் தட்டச்சு திறனை பரிசோதிக்கும் வகையில் கம்ப்யூட்டரில் தட்டச்சு திறன் தேர்வு செய்யப்படும்.
sci vacancy
விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC பிரிவினர்கள் ரூ.500. ( SC / ST /PWD பிரிவினர்களுக்கு மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு ரூ.250.) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.sci.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE