current affairs january 2022

Gktoday – (March-2022)-Current Affairs & GK Questions-Part-8

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (gktoday)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்….

gktoday

1. 2022 – ல் 5 – வது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தும் நாடு எது ?

  • இலங்கை

2. எஃகு கழிவுகளால் ஆன முதல் சாலையைப் பெற்றுள்ள இந்திய நகரம் எது ?

  • சூரத்

3. விக்டர் ஓர்பன் என்பவர் எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ?

  • ஹங்கேரி

4. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ஷாஹி லிச்சி சார்ந்த இந்திய மாநிலம் எது ?

  • பீகார்

5. பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கவதற்காக “DSLSA” சட்ட உதவியகத்தை தொடங்கிய அமைப்பு எது ?

  • தேசிய பெண்கள் ஆணையம்

6. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கேமராக்களால் சூழப்பட்டிருக்கும் இந்திய நகரம் எது ?

  • கோழிக்கோடு

7. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ளவா் யார்?

  • சுதா சேஷய்யன்

8. உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகளின் (IL & FS) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?

  • C.S. ராஜன்

9. தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய வீரர் யார் ?

  • கோவிந்த் சஹானி

10. தமிழக அரசு 44 – வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு பணி அதிகாரியாக யாரை நியமித்துள்ளது ?

  • தாரேஷ் அஹமது

gktoday

11. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பினாகா MK-1 ராக்கெட் அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது ?

  • ராஜஸ்தான்

12. “ஆர்டெமிஸ்” என்பது எந்த விண்வெளி முகமையின் முதன்மைத் திட்டமாகும் ?

  • NASA

13. பிப்லோபி பாரத் காட்சியகம், சமீபத்தில் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது ?

  • கொல்கத்தா

14. 2022 இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது ?

  • புதுடெல்லி

15. பார்முலா – 1 – ன் அதிகாரிப்பூர்வ ஒளிபரப்பு பாளராகவுள்ள இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் எது ?

  • டாட்டா கம்யூனிக்கேஷன்

16. எட்டிகோப்பகா பொம்மைகளுடன் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற கருத்தைச் செயல்படுத்திய முதல் ரயில் நிலையம் எது ?

  • விசாகப்பட்டினம்

17. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “சக்ஷம்” என்பது எந்த ஆயுதப்படையின் கடற்புற ரோந்துக் கப்பலாகும் ?

  • இந்திய கடலோரக் காவல்படை

18. எந்த மாநிலத்தில் முதலமைச்சராக பிரேன் சிங் பதவியேற்றார் ?

  • மணிப்பூர்

19. உலக கவிதை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது ?

  • மார்ச் 21

20. தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாடு திட்டமானது எவ்வகை திட்டத்தின் கீழ் வருகிறது ?

  • மத்திய துறைத் திட்டம்

gktoday

21. ஜோதி சஞ்சீவினி என்ற திட்டத்தை செயல்படுத்துகிற இந்திய மாநிலம் எது ?

  • கா்நாடகா

22. 2022 – M3M ஹீரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில், முதல் 10 – ல் இடம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?

  • முகேஷ் அம்பானி

23. 2022 – FIFA உலகக்கோப்பை நடத்தும் நாடு எது ?

  • கத்தார்

24. ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரிஜன் ஆரோக்கிய யோஜனாவைச் செயல்படுத்துவதற்கான மைய முகமை எது ?

  • தேசிய நலவாழ்வு ஆணையம்

25. CEEW – இன் அண்மைய ஆய்வின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ நிகழ்வுகளைக் கண்ட மாநிலம் எது ?

  • மிசோரம்

26. ரிக்கி கெஜ் மற்றும் பல்குனி ஷா ஆகியோர் சமீபத்தில் எந்த விருதை வென்றனர் ?

  • கிராமி விருதுகள்

27. P-75 ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 6 -வது நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன ?

  • வாக்ஷீர்

28. தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல GST  கலால் துறை அலுவலக முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

  • மண்டலிகா ஸ்ரீனிவாஸ்

29. கோவா மாநில முதல் – மந்திரியாக பதவியேற்றுள்ளவர் யார் ?

  • பிரமோத் சாவந்த்

30. பிரேசில் நாட்டின் தலைநகர் எது ?

  • பிரேசிலியா

gktoday

31. எந்த மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார் ?

  • உத்தரகாண்ட்

32. உலகின் முதல் வனவுயிரி பாதுகாப்புப் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் எது ?

  • உலக வங்கி

33. “Hwasong-17”  எனப் பெயரிடப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சமீபத்தில் பரிசோதனை செய்த நாடு எது ?

  • வடகொரியா

34. காட்டு விலங்குகளுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கிய உலகின் முதல் தென் அமெரிக்க நாடு எது ?

  • ஈக்வடார்

35. சமீபத்தில் எந்த நாட்டின் நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டின் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார் ?

  • துனீசியா

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்