current affairs january 2022

Current Affairs January 2022 | for TNPSC Examinations

TNPSC தேர்விற்கான ஜனவரி மாத நடப்பு நிகழ்வு மற்றும் பொதுஅறிவு கேள்விகள் : –

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

current affairs january 2022

1. அண்மையில் சர்வதேச திருக்குறள் மாநாடு – 2022 எங்கு நடைபெற்றது?

  • கோயம்புத்தூர்

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குண்ட்கட்டி சட்டம் எந்த இந்திய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது?

  • ஜார்கண்ட்

3. எண்கணித ஜோதிடத்தின் உலக கின்னஸ் சாதனையையும், 2022 – ம் ஆண்டின் முதல் உலக சாதனையும் படைத்துள்ளவர் யார் ?

  • J.C. சௌத்ரி

4. உலக ஹிந்தி மொழி தினமானது ஆண்டுதோறும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?

  • ஜனவரி 10

5. 2022 – ஆண்டின் 25 – வது தேசிய இளையோர் விழாவை நடத்திய யூனியன் பிரதேச அரசு எது ?

  • புதுச்சேரி

6. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற ஓநாய் எரிமலை, எந்த தீவுக்கூட்டத்தின் மிக உயரமான சிகரமாகும்?

  • கலபகோஸ் தீவுகள்

7. அணு ஆயுதப் போரைத் தவிர்க்கும் நோக்கில் சமீபத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட உலகளாகிய அமைப்பு எது ?

  • (UNSC) ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை

8. ஆண்டுத்தோறும் ஜனவரி 12 ஆம் நாள் யாருடைய பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் “தேசிய இளையோர் தினம்” கடைபிடிக்கப்படுகிறது ?

  • சுவாமி விவேகானந்தர்

9. அண்மையில் அமைக்கப்பட்ட எரி சக்தி மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் யார் ?

  • தருண் கபூர்

10. பிரவசி பாரதிய திவாஸ் என அழைக்கப்படும் நாள் எது ?

  • ஜனவரி 9 (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்)

Today current affairs 2022

11. நந்தூர் மத்மேஷ்வர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா

12. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை வங்கிகள் அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  • மூன்று

13. சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்ற “Plan Bee” உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது ?

  • இரயில்வே அமைச்சகம் 

14. நலபானா பறைவகள் சரணாலயம் உள்ள மாநிலம் எது ?

  • ஒடிசா

15. மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் யார் ?

  • மகேந்திர நாத் பாண்டே

16. செயற்கை சூரியன் என்பது எந்த நாட்டின் லட்சியத்திட்டமாகும் ?

  • சீனா

17. மத்திய எஃகு துறை அமைச்சர் யார் ?

  • ராம்சந்திர பிரசாத் சிங்

18. மிஷன் ஜீவன் ரக்சா பணியுடன் தொடர்புடைய காவல்படை எது ?

  • ரயில்வே காவல் படை

19. மெல்போர்ன் சம்மர் செட் ATP 250 நிகழ்வு பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார் ?

  • ரபேல் நடரால்

20. இந்தியாவின் முதல் பல பரிமாண சாகச விளையாட்டுப் பயணம் நடத்தப்பட்ட நாடு எது ?

  • பிரான்ஸ்

January current affairs 2022

21. பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 – க்கான சேவை வழங்குநராக உள்ள தொழில் நுட்ப நிறுவனம் எது?

  • TCS

22. ஒடிசாவின் எஃகு நகரம் என அழைக்கப்படுவது எது ?

  • ரூர்கேலா

23. ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

  • ராபர்ட்டா மெட்சோலா

24. இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியம் அமைந்துள்ள நகரம் எது ?

  • ஹைதராபாத்

25. 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுக்களை நடத்தவுள்ள மாநிலம் எது ?

  • கர்நாடகா

26. அண்மையில் இடம்பெற்ற குனோ பால்பூர் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது ?

  • மத்திய பிரதேசம்

27. நரகத்தின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படும் தர்வாசா வளிப்பள்ளம் அமைந்துள்ள நாடு எது ?

  • துர்க்மெனிஸ்தான்

28. ரிசர்வ் வங்கி எந்த பேமெண்ட் வங்கிக்கு ஷெட்யூல்டு வங்கியின் அந்தஸ்தை வழங்கியுள்ளது ?

  • ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி

29. பிரதம மந்திரி போஷான் சக்தி நிர்மான் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக அக்ஷய பாத்திரம் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ள அமைப்பு எது?

  • ஜ.நா. உலக உணவுத்திட்டம்

30. 12 – வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022  யாருக்கு வழங்கப்பட்டது ?

  • ஹர்ஷாலி மல்ஹோத்ரா

31. ஆயுதப்படை வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றது ?

  • ஜனவரி 14

32. ஸ்மார்ட் டவுன்ஷிப் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது ?

  • ஆந்திர பிரதேசம்

33. தொடர்ந்து நான்காவது முறையாக எந்த நாட்டின் அதிபராக டேனியல் ஒர்டேகா பதவியேற்றுள்ளார் ?

  • நிகரகுவா

34. கோவிட் 19 தடுப்பூசி பற்றிய இந்தியாவின் நினைவு அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ள தடுப்பூசி எது ?

  • கோவேக்சின்

35. 2022 – ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட புதிய துறையின் பெயர் என்ன ?

  • ஃபின்-டெக் துறை

36. அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்காக சிறப்பு குறை தீர்ப்புப் பிரிவை அறிவித்த மத்திய அமைச்சகம் எது ?

  • உணவு பதப்படுத்தும் தொழிலக அமைச்சகம் 

37. “Hydrophis Gracilis” என்ற ஓர் அரிய வகை கடல் பாம்பு காணப்பட்ட மாநிலம் எது ?

  • கேரளா

38. மகா மேளா என்பது எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மதஞ்சார் விழாவகாகும்?

  • உத்திரப் பிரதேசம்

39. நீதிபதி ஹேமா ஆணையத்தை அமைத்த மாநிலம் எது?

  • அஸ்ஸாம்

40. இந்தியாவின் குற்றிவியல் சட்டங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

  • உள்துறை அமைச்சகம் 

January month current affairs 2022

41. மூத்த அதிகாரியான விக்ரம் தேவ் தத், எந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • ஏர் இந்தியா

42. தடுப்பூசி போடப்படாத நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டென்னிஸ் வீரர் யார்?

  •  நோவக் ஜோகோவிச்

43. இந்திய உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்ட நாடு எது ?

  • மொரிஷியஸ்

44. ஆண்டுதோறும் “தேசிய துளிர் நிறுவனங்கள் நாள்” கொண்டாடப்படுகிற நாள் எது ?

  • ஜனவரி 16

45. சமீபத்தில் இடம்பெற்ற “(ALH) 84001” விண்கல், எந்த கோளிலிருந்து பூமியில் விழுந்தது ?

  • செவ்வாய்

46. இந்தியாவில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

  • பிலிப்பைன்ஸ்

47. தேசிய பேரிடர் மீட்புப்படை நாள்  ஆண்டு தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

  • ஜனவரி 19

48. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

  •  முருகன்

49. 2022 – ஆம் ஆண்டு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ள, மறைந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உதவித் துணை ஆய்வாளர் யார் ?

  • பாபு ராம்

50. “குடியரசு தினம் – 2022” – ஐ முன்னிட்டு ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் வழங்கிய பதக்கம் எது ?

  • பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்

51. ரத்தன் டாடாவுக்கு அசாம் மாநில அரசு வழங்கியுள்ள உயரிய விருது எது ?

  • அசாம் பைபவ்

52. “தேசிய வாக்காளர் தினம்” ஆண்டு தோறும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

  • ஜனவரி 25

53. நேதாஜி ஆராய்ச்சிக் கழகத்தால் வழங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருதினைப் பெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் யார் ?

  • ஷின்சோ அபே

54. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் பேட்மின்டன் பயிற்சி நிலையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • லக்னோ (உத்திரப் பிரதேசம்)

55. ஆண்டுதோறும் “தேசிய பெண் குழந்தை தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது ?

  • ஜனவரி 24

56. “ஜெய்ஹிந்த்” என்னும் முழக்கத்தினை முதலில் முழங்கியவர் யார் ?

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

57. பெஞ்ச் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்

58. “கிராம ஒன்” திட்டமானது எந்த மாநிலத்தின் முன்முயற்சியாகும்?

  • கர்நாடகா

59. “யோக்யதா” என்ற திறன் பேசி செயலி எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

  • பொது சேவை மையம் (CSC)

60. “உலகப் பொருளாதார நிலை & வாய்ப்புகள்” என்பது எந்த அமைப்பின் முதன்மை வெளியீடாகும்?

  • ஐக்கிய நாடுகள்

January current affairs 2022 in tamil

61. “மசாலாப் பொருட்கள் வாரியம்” என்பது எந்த அமைச்சகத்தின் கீழுள்ள ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாகும்?

  • வணிகம் & நகர்புற விகாரங்கள் அமைச்சகம்

62. பொது பார்மோசா USD பத்திரங்களை வெளியிடும் முதல் புதிய அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி எது ?

  • பாரத் ஸ்டேட் வங்கி (SBI)

63. ஆயிஷா மாலிக், எந்த நாட்டு உச்சநீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்?

  • பாகிஸ்தான்

64. இந்திய ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அறிமுக போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?

  • லக்ஷ்யா சென்

65. BHEL – ஆல் கட்டப்பட்ட நிலக்கரிலிருந்து மெத்தனால் எடுக்கும் இந்தியாவின் முதல் ஆலை அமைந்துள்ள இடம் எது?

  • ஹைதராபாத்

66. 2022 ஜனவரி நிலவரப்படி, எட்டுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறைந்தபட்சம் எத்தனை வளிப்பைகளைக் கொண்டிருக்கும் வேண்டும்?

  • இரண்டு

67. இந்திய அரசானது புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக யாரை நியமித்துள்ளது ?

  • டாக்டர் V. ஆனந்த நாகேஷ்வரன்

68. இந்தியாவில் உள்ள பட்டியலின சாதியினைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது ?

  • மகாராஷ்டிரா

69. இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • குருகிராம் (ஹரியானா)

70. உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை (லாக்) எங்கு திறக்கப்பட்டுள்ளது ?

  • இஜ்முய்தீன் (நெதர்லாந்து)

71. “ஹான்சன்ஸ் நோய்” என்று அழைக்கப்பட்டும் நோய் எது ?

  • தொழுநோய்

72. கிழக்குக் கடற்கரை பிரிவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • விசாகப்பட்டினம்

73. தற்போது தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி யார் ?

  • சத்யபிரதா சாஹீ

74. இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் தளபதியாக செயலாற்றியவர் யார்?

  • அனுஜ் குப்தா

75. 2022 – ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பில், எந்த அமைச்சகத்தின் காட்சிப் பீடமானது முதல் முறையாக இடம் பெற்றது ?

  • வான்வழிப் போக்குவரத்து அமைச்சகம்

76. “உழவு எந்திரமயமாக்கலின் துணைப் பணி” என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?

  • உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

77.  எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் இயங்குகிறது ?

  • சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

78. ” INS குக்ரி நினைவகம் ” அமைந்துள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது ?

  • டையூ

79. லாகோவா & புராச்சபேரி வனவுயிரி சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலம் எது ?

  • அஸ்ஸாம்

80. “டிஜிட்டல் கொடுப்பனவுக் குறியீட்டை ” வெளியிடுகிற நிறுவனம் எது ?

  • இந்திய ரிசர்வ் வங்கி

January current affairs 2022 pdf

81. இந்தியாவின் வடகோடியில் அமைந்துள்ள மாநிலம் எது ?

  • ஹிமாச்சல பிரதேசம்

82. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி உடன் தொடர்புடைய விளையாட்டு எது ?

  • கால்பந்து

83. “ஆபரேஷன் சர்த் ஹவா” -வை மேற்கொள்கிற இந்திய ஆயுதப்படை எது ?

  • எல்லை பாதுகாப்பு படை

84. “நுசந்தரா” என்பது எந்த நாட்டின் புதிய தலைநகரமாகும் ?

  • இந்தோனேசியா

85. “Halodule Uninervis” என்ற கடற்புல் வகையானது எந்த நோய்க்கு எதிராக வலுவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது ?

  • புற்றுநோய்

86. AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்துகிற நாடு எது ?

  • இந்தியா

87. குடியரசு தலைவர் சார்பாக இந்தியாவின் எதிர்பாராச் செலவுக்கான நிதியத்தை நிர்வகிக்கிற துறை எது ?

  • பொருளாதார விவகாரங்கள் துறை

88. சர்வதேச சுங்க நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது ?

  • ஜனவரி 26

89. சமீபத்தில் இடம் பெற்ற கிரிபட்டி தீவு எங்கு அமைந்துள்ளது ?

  • ஓசியானியா

90. 2022 –  ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிற நாடு எது ?

  • சீனா

January 2022 current affairs

91. இந்தியாவில் “அமர் ஜவான் ஜோதி நினைவகம்” நிறுவப்பட்ட ஆண்டு எது ?

  • 1972

92. தேவிநீலாபுரம் சர்வதேச பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது ?

  • ஆந்திர பிரதேசம்

93. அண்மையில் இடம் பெற்ற “நியோகோவ்” முதலில் எந்த உயிரினத்தில் கண்டறியப்பட்டது ?

  • வௌவால்

94. எந்த நகரத்தில் நெகிழிப்பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ?

  • மங்களூரு

95. முதலாவது, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட (UNDP) இந்திய இளையோர் காலநிலை சாம்பியனாக அறிவிக்கப்பட்டவர் யார் ?

  • பிரஐக்தா கோலி

96. ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு உயர்ந்த முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை யார் ?

  • சானியா மிர்சா

97. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு எவ்வகையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ?

  • நிபந்தனையுடனான சந்தை அங்கீகாரம்

98. ஸ்வச்சதா ஸ்டார்ட்- அப் சவாலை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

  • வீட்டுவசதி & நகர்புற விவகாரங்கள் அமைச்சகம்

99. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சுற்றி வரும் விண்வெளிப் பரப்பின் பெயர் என்ன?

  • லாக்ரேஞ்ச் புள்ளி

100. 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிடித்த இடம் எது?

  • மூன்றாவது

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்