தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – tncsc nagapattinam recruitment 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல், எழுத்தர், பருவகால உதவுபவர், மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNCSC Nagapattinam Recruitment 2022 Record Clerk Posts
1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 100
ஊதியம் : ரூ. 5,285 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பொறியியல் இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC Nagapattinam Recruitment 2022 Assistant Posts
2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்
காலியிடங்கள் : 74
ஊதியம் : ரூ. 5,218 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC Nagapattinam Recruitment 2022 Security & Watchman Posts
3. பணியின் பெயர் : பருவகால காவலர்
காலியிடங்கள் : 32
ஊதியம் : ரூ. 5,218+ ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for TNCSC Nagapattinam Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனுப்ப வேண்டிய முகவரி :
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நாகப்பட்டினம்.
விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 04.07.2022 (மாலை 5.00 மணிக்குள்) மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். குறிப்பு :- மேற்காணும் தகுதியுடைய நாகப்பட்டினம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பத்தாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
- பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு ஆண் / பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்தும், மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தாமதாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE