IFFCO – ல் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி -iffco recruitment 2021
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு துறையில் (iffco recruitment) தீயணைப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
பயிற்சியின் பெயர் : Fireman Trainee
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின் படி 18 – லிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC /ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் அரசு சலுகை அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி : Fire & Safety பிரிவில் 3 வருட இளங்கலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ITI (Fire) பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
iffco recruitment
உடற்தகுதி : உயரம் 165 செ.மீ எடை 50 கி.கி மார்பு 81 செ.மீ சாதாரண நிலையில் 86 செ.மீ விரிந்த நிலையில் இருக்க வேண்டும். பார்வைத்திறன் தெளிவாக இருக்க வேண்டும். இரவு குருட்டுத் தன்மை இருந்தால் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.
1. 50 கிலோ மணல் பையுடன் 100 கி.மீ ஓட்டம்.
2. 63 கிலோ எடையுள்ள மனிதனை 96 வினாடிகளில் 183 மீட்டர் தூரத்திற்கு சுமந்து செல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. 12 அடி கயிற்றில் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம் : B.Sc (Fire & Safety ) – 2 வருடங்கள்
For ITI (Fire ) – 3 வருடங்கள்
iffco recruitment
உதவித்தொகை : கல்வித்தகுதி மற்றும் திறமை அடிப்படையில் IFFCO விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இளங்கலை தகுதி, உடற்தகுதி, ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, மூலம் தோ்ந்தெடுக்கப்படுவர். ITI தகுதிக்கு உடற்தகுதி, ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் PET தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to apply for the iffco recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : www.iffco.in அல்லது www.iffcoyuva.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது நவீன புகைப்படம், கையொப்பம், ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட முகவரியைப் பார்க்கவும்.