தமிழக அரசு மருத்துவமனைகளில் (Government Hospital) வேலைவாய்ப்பு – 2021
தமிழக அரசின் யோகா மற்றும் நேச்சுரோபதி ( government hospital) மருத்துவ மையங்களில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Government hospital Recruitment 2021
1. பணியின் பெயர் : The rapeutic Assistant
மொத்த காலியிடங்கள் : 135 (ஆண்கள் – 53, பெண்கள் – 82)
சம்பளம் : ரூ. 375 (தினசரி)
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். SC / ST / SCA / BC / MBC / DNC பிரிவினர்கள் 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma in Nursing Therapy படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Nursing Therapy படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் +2 , 10 – ம் வகுப்பு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.
அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் சரியான மின்னஞ்சல் முகவரியை ( Valid E-mail ID) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணம் : www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து 25.8.2021 தேதிக்கு தபாலில் விண்ணப்பிக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director of Indian Medicine and Homeopathy,
Arumbakkam,
Chennai – 106.
மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.