இந்திய விமானப்படையில் அதிகாரிப்பணிக்கான AFCAT தேர்வு – 2022
இந்திய விமானப் படையின் Technical & Non-Technical பிரிவுகளில் அதிகாரிப் பணிக்கான AFCAT தேர்வு இந்திய விமானப் படையால் நடத்தப்படும். 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் – பெண்கள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழு விபரம் பின்வருமாறு.
தேர்வின் பெயர் : AFCAT Exam – 2022
1. பணியின் பெயர் : Commissioned Officer
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். DGCA – ஆல் வழங்கப்பட்ட Commercial Pilot Licence வைத்திருப்பவர்களுக்கு வயதுவரம்பு சலுகை வழங்கப்படும். விமானப் படையின் Ground Duty பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் குறைவானவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 -வில் கணித பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். Aeronautical / Electronics / Mechanical Engineering பாடங்களில் பட்டப்படிப்பை முடித்திருப்பது விரும்பத்தக்கது.
உடற்தகுதி :
- 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் ஓடிக்கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- 10 Push Ups, 3 Chin Ups எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விமானப் படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
- இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT தேர்வு (Airforce Common Admission Test) மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
- இத்தேர்வு பிப்ரவரி 2023 – ல் நடைபெறும்
- தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி.
- எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
- இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜீலை – 2023 – ல் பயிற்சி ஆரம்பமாகும்.
- விமானப் படையின் Flying பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 74 வாரங்களும், Ground Duty பிரிவிற்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையால் பயிற்சி வழங்கப்படும்.
- தேர்வுகளுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு AC – III Tier / AC Chair Car / ரயில் பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
- எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். NCC – Special Entry / Materology பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE