இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் Management Trainee பணிகளுக்கு (aicofindia) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Ref.No.:AIC/Rect/MT & Hindi Officer. 2021-22
aicofindia
1. பணியின் பெயர் : Management Trainee
காலியிடங்கள் : 30
i) பிரிவு : Agriculture Science
கல்வித்தகுதி : Agriculture / Horticulture பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agriculture Engineering – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Information Technology
கல்வித்தகுதி : Computer Science / IT – ல் B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது Computer Application – ல் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) பிரிவு : Legal
கல்வித்தகுதி : சட்டப் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) பிரிவு : Accounts
கல்வித்தகுதி : Commerce பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chartered Accountant / Company Secretary / Cost and Management Accountant / MBA (Finance) இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து பிரிவிற்கும் SC / ST பிரிவினருக்கு 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளவிகிதம் : முதல் வருடத்தில் 40,000, இரண்டாம் வருடம் 42,500 –ம் வழங்கப்படும்.
aicofindia
2. பணியின் பெயர் : Hindi Officer
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 32,795
கல்வித்தகுதி : ஹிந்தி பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்து இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு வயதுவரம்பு : 1.11.2021 தேதியின் படி 21 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1.11.1991 பின்னரும் 31.10.2000 தேதிக்குள்ளும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Objective மற்றும் Descriptive நிலையில் 150 வினாக்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.200. இதர பிரிவினருக்கு ரூ. 1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.aicofindia.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், இடது பெருவிரல் ரேகை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். மேலும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT