DRDO – வில் B.E / Diploma / ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி :
ஒரிசா மாநிலத்தில் பாலசூரிலுள்ள DRDO ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் (apprentice training) அப்ரண்டிஸ் பயிற்சிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:ITR/HRD/AT/06/2021
1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentice
மொத்த காலியிடங்கள் : 50
உதவித்தொகை : ரூ. 9000
கல்வித்தகுதி : CSE / IT / EEE / ECE / Electronics / Robotic Engineering / Civil / Mechanical / Electrical / Embedded System / Aerospace Engineering / Safety Engineering போன்ற பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது BBA / B.Com / B.Lib.Sc போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
2. பயிற்சியின் பெயர் : Technician Apprentice
மொத்த காலியிடங்கள் : 40
உதவித்தொகை : ரூ. 8000
கல்வித்தகுதி : CSE / IT / EEE / ECE / Electronics / Tool Engineering / Civil / Mechanical / Electrical / Embedded System / Applied Electronics போன்ற பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது Cinematography / MLT / Hotel Management & Catering Technology / Environment Pollution & Control Engineering போன்ற ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
apprentice training
3. பயிற்சியின் பெயர் : Trade Apprentice
மொத்த காலியிடங்கள் : 26
கல்வித்தகுதி : Electrician / Mechanic (Motor Vehicle) / Computer Net Working Technician / Mechanic Power Electronics / Multimedia and Web page Designer போன்ற ஏதாவதொரு தொழில்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : B.E / Diploma / ITI போன்ற சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். 2019 – ஆம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். Trade Apprentice பயிற்சிக்கு அரசு விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். ஒரு வருடம் பயற்சி வழங்கப்படும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Video Conference மூலம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அழைப்புக் கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : BE / Diploma / B.Com / B.B.A / B.Sc Lib பட்டதாரிகள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாகவும். ITI படித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளம் வழியாகவும். தங்களுடைய கல்வித்தகுதி தொடர்பான விபரங்களை பதிவு செய்து விட்டு www.rac.gov.in என்ற இணையதளம் மூலமாக 15.11.2021 தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
2. MIDHANI நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி :-
ஹைதராபாத்திலுள்ள மிதானி நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
apprentice training
Advt.No.:MDN/APR/2021/1
1. டிரேடின் பெயர் : Machinist
காலியிடங்கள் : 20
2. டிரேடின் பெயர் : Turner
காலியிடங்கள் : 20
மேற்கண்ட டிரேடுகளுக்கான உதவித்தொகை : ரூ. 8,050.
3. டிரேடின் பெயர் : Welder (G&E)
காலியிடங்கள் : 30
உதவித்தொகை : ரூ. 7,700
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடுகளில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் பதிவுச் செய்து, பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளவும். பின்னர் www.midhani.india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 13.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Deputy Manager (TIS & Apprenticeship Training ),
Mishra Dhatu Nigam Limited,
Kanchanbagh,
Hyderabad – 500 058.
மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு 040-2418-4508 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளவும்..