சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – 2022
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கீழ்க்கண்ட தகுதியுள்ள, அனுபவம் வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
Chennai social welfare Department Recruitment 2022
1. பணியின் பெயர் : Centre Administrator (மைய நிர்வாகி)
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master Degree in Social work / Psychology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சனைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்ச 1 வருடம் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Senior Counsellor
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 20,000
கல்வித்தகுதி : சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master Degree in Social work / Psychology ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை வளர்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சனைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 2 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்ச 1 வருடம் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
social welfare Department Recruitment 2022
3. பணியின் பெயர் : Case Worker (வழங்கு அலுவலர்கள்)
காலியிடங்கள் : 11
மாத ஊதியம் : ரூ. 15,000
கல்வித்தகுதி : சமூகப் பணியில் இளநிலை பட்டம் (Bachelor’s Degree in Social work / Psychology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சனைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்ச 1 வருடம் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.
Chennai social welfare Recruitment 2022
4. பணியின் பெயர் : Multi-Purpose Helper (பன்முக உதவியாளர்)
காலியிடங்கள் : 3
மாத ஊதியம் : ரூ. 6,400
கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஏதாவது அலுவகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
5. பணியின் பெயர் : Security Guard (பாதுகாப்பாளர்)
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
How to Apply for Chennai social welfare Department Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிலோ விண்ணப்பிக்கலாம்.
முகவரி :
மாவட்ட ஆட்சியர் ஆலுவலக வளாகம்,
8 வது தளம், சிங்கார வேலன் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை – 01.
மின்னஞ்சல் முகவரி : chndswo.4568@gmail.com
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE