TNPSC தேர்விற்கான ஜனவரி மாத நடப்பு நிகழ்வு மற்றும் பொதுஅறிவு கேள்விகள் : –
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
current affairs january 2022
1. அண்மையில் சர்வதேச திருக்குறள் மாநாடு – 2022 எங்கு நடைபெற்றது?
- கோயம்புத்தூர்
2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குண்ட்கட்டி சட்டம் எந்த இந்திய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது?
- ஜார்கண்ட்
3. எண்கணித ஜோதிடத்தின் உலக கின்னஸ் சாதனையையும், 2022 – ம் ஆண்டின் முதல் உலக சாதனையும் படைத்துள்ளவர் யார் ?
- J.C. சௌத்ரி
4. உலக ஹிந்தி மொழி தினமானது ஆண்டுதோறும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
- ஜனவரி 10
5. 2022 – ஆண்டின் 25 – வது தேசிய இளையோர் விழாவை நடத்திய யூனியன் பிரதேச அரசு எது ?
- புதுச்சேரி
6. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற ஓநாய் எரிமலை, எந்த தீவுக்கூட்டத்தின் மிக உயரமான சிகரமாகும்?
- கலபகோஸ் தீவுகள்
7. அணு ஆயுதப் போரைத் தவிர்க்கும் நோக்கில் சமீபத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட உலகளாகிய அமைப்பு எது ?
- (UNSC) ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
8. ஆண்டுத்தோறும் ஜனவரி 12 ஆம் நாள் யாருடைய பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் “தேசிய இளையோர் தினம்” கடைபிடிக்கப்படுகிறது ?
- சுவாமி விவேகானந்தர்
9. அண்மையில் அமைக்கப்பட்ட எரி சக்தி மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் யார் ?
- தருண் கபூர்
10. பிரவசி பாரதிய திவாஸ் என அழைக்கப்படும் நாள் எது ?
- ஜனவரி 9 (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்)
Today current affairs 2022
11. நந்தூர் மத்மேஷ்வர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
- மகாராஷ்டிரா
12. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை வங்கிகள் அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
- மூன்று
13. சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்ற “Plan Bee” உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது ?
- இரயில்வே அமைச்சகம்
14. நலபானா பறைவகள் சரணாலயம் உள்ள மாநிலம் எது ?
- ஒடிசா
15. மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் யார் ?
- மகேந்திர நாத் பாண்டே
16. செயற்கை சூரியன் என்பது எந்த நாட்டின் லட்சியத்திட்டமாகும் ?
- சீனா
17. மத்திய எஃகு துறை அமைச்சர் யார் ?
- ராம்சந்திர பிரசாத் சிங்
18. மிஷன் ஜீவன் ரக்சா பணியுடன் தொடர்புடைய காவல்படை எது ?
- ரயில்வே காவல் படை
19. மெல்போர்ன் சம்மர் செட் ATP 250 நிகழ்வு பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார் ?
- ரபேல் நடரால்
20. இந்தியாவின் முதல் பல பரிமாண சாகச விளையாட்டுப் பயணம் நடத்தப்பட்ட நாடு எது ?
- பிரான்ஸ்
January current affairs 2022
21. பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 – க்கான சேவை வழங்குநராக உள்ள தொழில் நுட்ப நிறுவனம் எது?
- TCS
22. ஒடிசாவின் எஃகு நகரம் என அழைக்கப்படுவது எது ?
- ரூர்கேலா
23. ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- ராபர்ட்டா மெட்சோலா
24. இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியம் அமைந்துள்ள நகரம் எது ?
- ஹைதராபாத்
25. 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுக்களை நடத்தவுள்ள மாநிலம் எது ?
- கர்நாடகா
26. அண்மையில் இடம்பெற்ற குனோ பால்பூர் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது ?
- மத்திய பிரதேசம்
27. நரகத்தின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படும் தர்வாசா வளிப்பள்ளம் அமைந்துள்ள நாடு எது ?
- துர்க்மெனிஸ்தான்
28. ரிசர்வ் வங்கி எந்த பேமெண்ட் வங்கிக்கு ஷெட்யூல்டு வங்கியின் அந்தஸ்தை வழங்கியுள்ளது ?
- ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி
29. பிரதம மந்திரி போஷான் சக்தி நிர்மான் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக அக்ஷய பாத்திரம் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ள அமைப்பு எது?
- ஜ.நா. உலக உணவுத்திட்டம்
30. 12 – வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022 யாருக்கு வழங்கப்பட்டது ?
- ஹர்ஷாலி மல்ஹோத்ரா
31. ஆயுதப்படை வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றது ?
- ஜனவரி 14
32. ஸ்மார்ட் டவுன்ஷிப் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது ?
- ஆந்திர பிரதேசம்
33. தொடர்ந்து நான்காவது முறையாக எந்த நாட்டின் அதிபராக டேனியல் ஒர்டேகா பதவியேற்றுள்ளார் ?
- நிகரகுவா
34. கோவிட் 19 தடுப்பூசி பற்றிய இந்தியாவின் நினைவு அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ள தடுப்பூசி எது ?
- கோவேக்சின்
35. 2022 – ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட புதிய துறையின் பெயர் என்ன ?
- ஃபின்-டெக் துறை
36. அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்காக சிறப்பு குறை தீர்ப்புப் பிரிவை அறிவித்த மத்திய அமைச்சகம் எது ?
- உணவு பதப்படுத்தும் தொழிலக அமைச்சகம்
37. “Hydrophis Gracilis” என்ற ஓர் அரிய வகை கடல் பாம்பு காணப்பட்ட மாநிலம் எது ?
- கேரளா
38. மகா மேளா என்பது எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மதஞ்சார் விழாவகாகும்?
- உத்திரப் பிரதேசம்
39. நீதிபதி ஹேமா ஆணையத்தை அமைத்த மாநிலம் எது?
- அஸ்ஸாம்
40. இந்தியாவின் குற்றிவியல் சட்டங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
- உள்துறை அமைச்சகம்
January month current affairs 2022
41. மூத்த அதிகாரியான விக்ரம் தேவ் தத், எந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்?
- ஏர் இந்தியா
42. தடுப்பூசி போடப்படாத நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டென்னிஸ் வீரர் யார்?
- நோவக் ஜோகோவிச்
43. இந்திய உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்ட நாடு எது ?
- மொரிஷியஸ்
44. ஆண்டுதோறும் “தேசிய துளிர் நிறுவனங்கள் நாள்” கொண்டாடப்படுகிற நாள் எது ?
- ஜனவரி 16
45. சமீபத்தில் இடம்பெற்ற “(ALH) 84001” விண்கல், எந்த கோளிலிருந்து பூமியில் விழுந்தது ?
- செவ்வாய்
46. இந்தியாவில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?
- பிலிப்பைன்ஸ்
47. தேசிய பேரிடர் மீட்புப்படை நாள் ஆண்டு தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- ஜனவரி 19
48. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
- முருகன்
49. 2022 – ஆம் ஆண்டு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ள, மறைந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உதவித் துணை ஆய்வாளர் யார் ?
- பாபு ராம்
50. “குடியரசு தினம் – 2022” – ஐ முன்னிட்டு ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் வழங்கிய பதக்கம் எது ?
- பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்
51. ரத்தன் டாடாவுக்கு அசாம் மாநில அரசு வழங்கியுள்ள உயரிய விருது எது ?
- அசாம் பைபவ்
52. “தேசிய வாக்காளர் தினம்” ஆண்டு தோறும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
- ஜனவரி 25
53. நேதாஜி ஆராய்ச்சிக் கழகத்தால் வழங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருதினைப் பெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் யார் ?
- ஷின்சோ அபே
54. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் பேட்மின்டன் பயிற்சி நிலையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
- லக்னோ (உத்திரப் பிரதேசம்)
55. ஆண்டுதோறும் “தேசிய பெண் குழந்தை தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது ?
- ஜனவரி 24
56. “ஜெய்ஹிந்த்” என்னும் முழக்கத்தினை முதலில் முழங்கியவர் யார் ?
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
57. பெஞ்ச் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
- மத்தியப் பிரதேசம்
58. “கிராம ஒன்” திட்டமானது எந்த மாநிலத்தின் முன்முயற்சியாகும்?
- கர்நாடகா
59. “யோக்யதா” என்ற திறன் பேசி செயலி எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
- பொது சேவை மையம் (CSC)
60. “உலகப் பொருளாதார நிலை & வாய்ப்புகள்” என்பது எந்த அமைப்பின் முதன்மை வெளியீடாகும்?
- ஐக்கிய நாடுகள்
January current affairs 2022 in tamil
61. “மசாலாப் பொருட்கள் வாரியம்” என்பது எந்த அமைச்சகத்தின் கீழுள்ள ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாகும்?
- வணிகம் & நகர்புற விகாரங்கள் அமைச்சகம்
62. பொது பார்மோசா USD பத்திரங்களை வெளியிடும் முதல் புதிய அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி எது ?
- பாரத் ஸ்டேட் வங்கி (SBI)
63. ஆயிஷா மாலிக், எந்த நாட்டு உச்சநீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்?
- பாகிஸ்தான்
64. இந்திய ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அறிமுக போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
- லக்ஷ்யா சென்
65. BHEL – ஆல் கட்டப்பட்ட நிலக்கரிலிருந்து மெத்தனால் எடுக்கும் இந்தியாவின் முதல் ஆலை அமைந்துள்ள இடம் எது?
- ஹைதராபாத்
66. 2022 ஜனவரி நிலவரப்படி, எட்டுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறைந்தபட்சம் எத்தனை வளிப்பைகளைக் கொண்டிருக்கும் வேண்டும்?
- இரண்டு
67. இந்திய அரசானது புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக யாரை நியமித்துள்ளது ?
- டாக்டர் V. ஆனந்த நாகேஷ்வரன்
68. இந்தியாவில் உள்ள பட்டியலின சாதியினைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது ?
- மகாராஷ்டிரா
69. இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
- குருகிராம் (ஹரியானா)
70. உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை (லாக்) எங்கு திறக்கப்பட்டுள்ளது ?
- இஜ்முய்தீன் (நெதர்லாந்து)
71. “ஹான்சன்ஸ் நோய்” என்று அழைக்கப்பட்டும் நோய் எது ?
- தொழுநோய்
72. கிழக்குக் கடற்கரை பிரிவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
- விசாகப்பட்டினம்
73. தற்போது தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி யார் ?
- சத்யபிரதா சாஹீ
74. இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் தளபதியாக செயலாற்றியவர் யார்?
- அனுஜ் குப்தா
75. 2022 – ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பில், எந்த அமைச்சகத்தின் காட்சிப் பீடமானது முதல் முறையாக இடம் பெற்றது ?
- வான்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
76. “உழவு எந்திரமயமாக்கலின் துணைப் பணி” என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?
- உழவு & உழவர்கள் நல அமைச்சகம்
77. எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் இயங்குகிறது ?
- சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்
78. ” INS குக்ரி நினைவகம் ” அமைந்துள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது ?
- டையூ
79. லாகோவா & புராச்சபேரி வனவுயிரி சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலம் எது ?
- அஸ்ஸாம்
80. “டிஜிட்டல் கொடுப்பனவுக் குறியீட்டை ” வெளியிடுகிற நிறுவனம் எது ?
- இந்திய ரிசர்வ் வங்கி
January current affairs 2022 pdf
81. இந்தியாவின் வடகோடியில் அமைந்துள்ள மாநிலம் எது ?
- ஹிமாச்சல பிரதேசம்
82. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி உடன் தொடர்புடைய விளையாட்டு எது ?
- கால்பந்து
83. “ஆபரேஷன் சர்த் ஹவா” -வை மேற்கொள்கிற இந்திய ஆயுதப்படை எது ?
- எல்லை பாதுகாப்பு படை
84. “நுசந்தரா” என்பது எந்த நாட்டின் புதிய தலைநகரமாகும் ?
- இந்தோனேசியா
85. “Halodule Uninervis” என்ற கடற்புல் வகையானது எந்த நோய்க்கு எதிராக வலுவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது ?
- புற்றுநோய்
86. AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்துகிற நாடு எது ?
- இந்தியா
87. குடியரசு தலைவர் சார்பாக இந்தியாவின் எதிர்பாராச் செலவுக்கான நிதியத்தை நிர்வகிக்கிற துறை எது ?
- பொருளாதார விவகாரங்கள் துறை
88. சர்வதேச சுங்க நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது ?
- ஜனவரி 26
89. சமீபத்தில் இடம் பெற்ற கிரிபட்டி தீவு எங்கு அமைந்துள்ளது ?
- ஓசியானியா
90. 2022 – ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிற நாடு எது ?
- சீனா
January 2022 current affairs
91. இந்தியாவில் “அமர் ஜவான் ஜோதி நினைவகம்” நிறுவப்பட்ட ஆண்டு எது ?
- 1972
92. தேவிநீலாபுரம் சர்வதேச பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது ?
- ஆந்திர பிரதேசம்
93. அண்மையில் இடம் பெற்ற “நியோகோவ்” முதலில் எந்த உயிரினத்தில் கண்டறியப்பட்டது ?
- வௌவால்
94. எந்த நகரத்தில் நெகிழிப்பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ?
- மங்களூரு
95. முதலாவது, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட (UNDP) இந்திய இளையோர் காலநிலை சாம்பியனாக அறிவிக்கப்பட்டவர் யார் ?
- பிரஐக்தா கோலி
96. ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு உயர்ந்த முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை யார் ?
- சானியா மிர்சா
97. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு எவ்வகையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ?
- நிபந்தனையுடனான சந்தை அங்கீகாரம்
98. ஸ்வச்சதா ஸ்டார்ட்- அப் சவாலை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
- வீட்டுவசதி & நகர்புற விவகாரங்கள் அமைச்சகம்
99. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சுற்றி வரும் விண்வெளிப் பரப்பின் பெயர் என்ன?
- லாக்ரேஞ்ச் புள்ளி
100. 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிடித்த இடம் எது?
- மூன்றாவது
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE