சென்னையிலுள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் (Commissioner of Customs) காலியாக உள்ள கீழ்வரும் Group ” C “ பணிகளுக்கு (customs jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
customs jobs
1. பணியின் பெயர் : Sukhani
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் 7 வருடங்கள் கடற்சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இயந்திர படகுகளை தனியாக ஓட்டுவதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Seamen
காலியிடங்கள் : 4 (ST-1, OBC-2, UR-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Helmsman மற்றும் Seamanship பணிகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Greaser (Group “C”)
காலியிடங்கள் : 2 (SC-1, UR-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இயந்திர படகுகளை பராமரிப்பதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General knowledge மற்றும் Technical knowledge தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.chennaicustoms.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 31.12.2021 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும். விண்ணப்படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 மற்றும் சுய முகவரி எழுதப்பட்ட 2 தபால் கவர் (அளவு 25 cm x 12 cm) ஆகியவற்றின் இணைத்து அனுப்பவும்.
customs jobs
2. வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் :-
2014 – ம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல்வேறு காரணங்களால் பதிவை புதுப்பிக்க தவறி சீனியாரிட்டியை இழந்தவர்கள் 3 மாதங்களுக்குள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இச்சலுகையானது 2014, 2015, 2016 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மட்டும் பொருந்தும். 1.1.2014 – ம் தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இது பற்றிய கூடுதல் விபரத்தை தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
customs jobs
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT