Karur District Court Recruitment 2022

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – district court recruitment 2022

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிகளுக்கு தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Karur District Court Recruitment 2022

பணியின் பெயர் : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III

காலியிடங்கள் : 08

ஊதிய விகிதம் : ரூ. 20,600  – 65,500

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பக் கல்வித்தகுதி :

  •  தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை (or)
  • தமிழ் தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் இளநிலை (or)
  • தமிழ் தட்டச்சு தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கல தட்டச்சு தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை (or)
  • தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை (or)
  • தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Karur District Court Steno Typist Selection Process 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for Karur District Court Steno Typist Post

விண்ணப்பிக்கும் முறை :   www.district.ecourts.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து உரிய சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation) இணைத்து பதிவு தபால் (ஒப்புகை அட்டையுடன்) மூலம் அனுப்ப வேண்டும்.

சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.

விண்ணப்பங்கள் (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணி புரியும் விவரங்களுடன் (ஏதும் இருப்பின்) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்பு திருமணம்) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடன் கீழ்க்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

மாவட்ட நீதிபதி,

மாவட்ட நீதிமன்றம், 

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,

தாந்தோன்றிமலை,

கரூர் – 639 007.

Important Date for Karur District court Steno Typist Post :

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.6.2022  (மாலை 5.45 மணிக்குள்)

District Court Recruitment 2022

குறிப்பு : 

  • விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு உரிய சுய சான்றொப்பத்துடனும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். மேலும் சுய சான்றொப்பம் தவிர வேறு எந்தவிதமான சான்றொப்பம் பெறத் தேவையில்லை. இருப்பினும்,  விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச் சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும்.
  • அனைத்து தகவல் பரிமாற்றங்களும் ( தேர்வு / நேர்காணலுக்கான அழைப்பு / விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது).  www.distirct.ecourt.gov.in/karur  என்ற இணையதள  வலைதளத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே, விண்ணப்பதார்கள் மேற்கூரிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தனது இருப்பிட சான்று குறித்து ஓட்டுநர் உரிமம், வாக்களார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கின் முதல் பக்கம் ஆகியவற்றில்  ஏதேனும் ஒன்றின் நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • முன்னுரிமை கோரும் நேர்வுகளில் முன்னுரிமைக்கான உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
  • பதவி நியமன உத்தரவு தபால் மூலமும், இணையதளம் மூலமும் தெரிவிக்கப்படும். 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்