ndtl recruitment

FSSAI -ல் Manager / Jt. Director / Dy. Director பணிகள் – fssai recruitment 2021

FSSAI -ல் Manager / Jt. Director / Dy. Director பணிகள் – fssai recruitment 2021

இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நல பிரிவில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தர அதிகாரப் பிரிவில் (fssai recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. i) பணியின் பெயர் : Joint Director (Technical)

காலியிடங்கள் : 8 (UR-4, OBC-2, SC-1, EWS-1)

கல்வித்தகுதி : Food Science & Technology / Food Nutrition / Edible Oil Technology / Micro – Biology / Dairy Technology / Agricultural / Horticultural Sciences / Chemistry / Bio Chemistry – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் பி.இ / பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பணியின் பெயர் : Joint Director ( Admin & Finance )

காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)

கல்வித்தகுதி : ஏதாவதொரு ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA தேர்ச்சியுடன் Administration, Finance, Human Resource Development – ல் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

fssai recruitment 2021

2. பணியின் பெயர் : Senior Manager (Journalism or Mass Communication or Public Relation)

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : Journalism அல்லது Mass Communication அல்லது Public Relation – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.  பணியின் பெயர் : Senior Manager (IT)

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : Computer Science – ல் B.Tech. / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(fssai recruitment 2021)

4.i) பணியின் பெயர் : Deputy Director (Technical)

காலியிடம் : 11 (UR-5, OBC-3, SC-1, ST-1, EWS-1)

கல்வித்தகுதி : Life Science / Biotechnology / Bio chemistry / Food Technology / Food Science & Technology / Food Nutrition / Edible Oil Technology / Microbiology / Dairy Technology / Agricultural / Horticultural Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ii) பணியின் பெயர் : Deputy Director (Admin & Finance)

காலியிடம் : 6 (UR-4, OBC-1, SC-1)

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(fssai recruitment 2021)

5.i) பணியின் பெயர் : Manager (Journalism / Mass Communication / Public Relation )

காலியிடம் : 3 (UR-2, OBC-1)

கல்வித்தகுதி : Journalism / Mass Communication / Public Relation -ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) பணியின் பெயர் : Manager (Marketing)

காலியிடம் : 2 (UR)

கல்வித்தகுதி : Marketing பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) பணியின் பெயர் : Manager (Social Work / Psychology)

காலியிடம் : 1 (UR)

கல்வித்தகுதி : Social Work / Psychology / Labour / Social Welfare பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(fssai recruitment 2021)

வயதுவரம்பு : பணி 1,2, மற்றும் 3 -க்கு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பணி 4 மற்றும் 5 -க்கு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம் : பணி எண் 1, 2 மற்றும் 3 -க்கு : ரூ.78,800 – 2,09,200 .  பணி எண் 4 மற்றும் 5 – க்கு : ரூ.67,700 – 2,08,700

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : OBC மற்றும் பொது பிரிவினர் ரூ.750. + அறிவிப்பு கட்டணம் ரூ.250. மொத்தம் ரூ.1000.   SC / ST / PWD / EX- SM / EWS / பெண்கள் பிரிவினர் ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை : www.fssal.gov.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது நவீன புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்யும். மேலும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைக்கவும்.

தேர்விற்கு தேவையான e-admit card – ஐ தேர்வு தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.5.2021

தேர்விற்கான Admit Card பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டிய நாள் : 5.6.2021

எழுத்துத்தேர்வு நடைப்பெறும் நாள் : 20.6.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்