upsc exam

G.K ( General knowledge) & Current Affairs Questions & Answers in Tamil – 2021

GK Current Affairs 2021

1. 2021 பிப்ரவரியில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது – இந்தியா

2. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப தொழில்முனைவோர் யார் – ஸ்ரீதர் வேம்பு

3. எந்த இந்திய அமைப்பில் செயல் தலைவராக பிரவீன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா் – மத்திய புலனாய்வு முகமை.

4. புதுப்பிக்கத்தக்க எரிசத்தித் துறையில், எந்த நாட்டுடனான முதல் கூட்டு செயற்குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது – பக்ரைன்.

5. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற ” KAPILA ” திட்டம் , எந்த துறையுடன் தொடர்புடையது. – அறிவுசார் சொத்துரிமை.

6. இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது – குரு கிராம்.

7. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்டத்தை தயாரிப்பதற்கான துணைக் குழுவை அமைத்துள்ள அமைப்பு எது – நிதி ஆயோக்.

current affairs

8. பன்னாட்டு எரிசக்தி முகமையின் சமீப அறிக்கையின்படி எரிசக்தி நுகர்வுகளில் இந்தியா வசிக்கும் இடம் என்ன – நான்காவது.

9. சோயுஸ் -2 ஏந்தி ஏவூர்தியானது ( Carrier Rocket ) எந்த நாட்டின் முதன்மை ஏவுகலமாகும் – ரஷ்யா.

10. நாட்டில் NGOS பெறும் அயல்நாட்டு மானியங்கள், எந்த சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன – அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்.

11. 2020 -ம் ஆண்டு நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில், முதலிடத்திலுள்ள மாநிலம் எது – தமிழ்நாடு.

12. ” அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள் ” கடைப்பிடிக்கப்படுகின்ற தேதி எது – பிப்ரவரி 11.

13. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 6- வது இந்திய கிரிக்கெட் வீரர் யார் – இஷாந்த் சர்மா.

14. பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் கவுன்சிலிடமிருந்து உலக வாடிக்கையாளரின் குரல் விருதைப் பெற்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது – பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்.

15. எக்கனாமிக் டைம்ஸ் விருதுகளில் ஆண்டின் சிறந்த வணிக சீர்திருத்தவாதி விருதை வென்றவர் யார் – சக்திகாந்த தாஸ்.

GK Current Affairs 2021

16. ” இந்திய பொம்மை கண்காட்சி ” தொடங்கப்பட்ட ஆண்டு எது – 2021.

17. ” By Many a Happy Accident : Recollections of a Life ” என்ற நூலின் ஆசிரியர் யார் – ஹமீது அன்சாரி.

18. தேசிய தோட்டக்கலை கண்காட்சி 2021 – ன் கருப்பொருள் என்ன – Horticulture for Start-up and Stand-up india.

19. 2021 : சன்டான்ஸ் திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருது வென்ற இந்திய ஆவணப்படம் எது – Writting With Fire.

20. சமீப செய்திகள் இடம் பெற்ற ” அல்-அமல் ” என்பது எந்தத நாட்டின் ஆளில்லா விண்வெளி ஆய்வுக்கலமாகும் – ஐக்கிய அரபு அமீரகம்.

21. உலக பருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது – பிப்ரவரி 10.

22. ATP கோப்பைக்கான டென்னிஸ் போட்டியை வென்ற நாடு எது – ரஷ்யா.

23. பிரதமர் உர்ஜா கங்கை திட்டத்தின் ஒரு பகுதியான தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது – மேற்கு வங்காளம்.

24. அண்மையில் இந்தியாவிடமிருந்து கோவிட் – 19 தடுப்பூசிகளைப் பெற்ற பார்படோஸின் தலைநகரம் எது – பிரிட்ஜ்டவுன்.

25. நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் யார் – ஜோ ரூட்.

26. தேசிய பாதுகாப்பு குழு வை அமைத்துள்ள அமைச்சகம் எது – தொழிலாளர் அமைச்சகம்.

27. அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திருவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது – தமிழ்நாடு.

28. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Brookesia nana என்பது எந்த குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும் – பச்சோந்தி.

29. இந்திய – அமெரிக்கரான பவ்யா லால் எந்த அமைப்பின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் – நாசா.

30. 2020 ஆம் ஆண்டின் ஹிந்தி சொல் லாக ஆக்ஸ்போர்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது – ஆத்மநிர்பார்தா.

31. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் LIC புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் – சீத்தார்த்த மொஹந்தி.

32. ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான இந்தியாவின் முதலாவது மையம் எந்த இந்திய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது – சென்னை.

33. காமன்வெல்த் மனிதவுரிமைகள் முன்னெடுப்பு என்பது எந்த நாட்டில் உள்ள ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும் – இந்தியா

current affairs

.34. அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக மகளிர் சிறப்புத்துவ விருது 2021 – ஐ பெற்றுள்ள 4 பெண்கள் யாவர் – 1. டாக்டர் ஷோபனா கபூர் – வேதியியல் உயிரியல் 2. டாக்டர் அந்தரா பானர்ஜி – சுகாதார அறிவியல் 3. டாக்டர் சோனு காந்தி – நானோ உயிரித் தொழில்நுட்பம்.

35. யாருடைய பிறந்த நாளானது தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது – சரோஜினி நாயுடு.

36. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் யார் – நீதின் கட்கரி.

37. கெம்பகௌடா சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் விமான நிலையம் எது – பெங்களூரு சர்வதேச விமான நிலையம்.

38. NPC என்பதன் விரிவாக்கம் என்ன – National Productivity Council.

39. உலக யுனானி தினம் யாருடைய பிறந்த நாளை குறிக்கும் வகையில் கொண்டப்படுகிறது. – ஹக்கீம் அஜ்மல்கான்.

40. கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ள 31- வது மாவட்டம் எது – விஜய நகரம்.

41. உலக வர்த்தக அமைப்பின் WTO தலைவராக பணியாற்றவிருக்கும் முதலாவது பெண்மணி மற்றும் முதலாவது ஆப்பிரிக்கர் யார் – நுகோசி ஓகோனஜோ – இவேலா

42. பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் எவ்வமைப்பின் கீழ் செயல்படுகிறது – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO.

43. தனது அமைச்சரவையின் மொத்தச் செயலாக்கத்தையும் காகிதமில்லாமல் பணியாற்றச் செய்த இந்தியாவின் முதல் மாநிலம் எது – இமாச்சலப் பிரதேசம்.

44. IIHR என்பதன் விரிவாக்கம் என்ன – Indian Institute of Horticultural Research.

45. கோப்ரா என்பது என்ன – இந்திய மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு நடவடிக்கைப் பிரிவு.

46. பெட்ஃபர்ஸ்ட் என்னும் குழந்தைகளுக்கான சேமிப்பு வங்கிக்கணக்குத்திட்டத்தை தொடங்கியுள்ள வங்கி எது – பெடரல் வங்கி.

47. டிண்டல் விளைவை கண்டுபிடித்தவர் யார் – ஜான் டிண்டல்.

48. இந்தியாவின் மிகப் பெரிய பாலைவனம் எது – தார்ப் பாலைவனம்.

49. பாரதியாரின் மனைவி பெயர் என்ன – செல்லம்மாள்.

50. சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுவது எது – மஞ்சள் ஆறு.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி/பேங்க் வேலைவாய்ப்புகள்