CSIR CHENNAI RECRUITMENT

Hindustan Copper Limited (HCL) – ல் Diploma படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

ஹிந்துஸ்தான் (HCL) காப்பர் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: HCL/MCP/HR/Recruitment/2021/01

HCL

1.பணியின் பெயர் : Assistant Foreman (MIning)

காலியிடங்கள் : 11 (UR-7, OBC-2, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ.18,480 – 45,400

கல்வித்தகுதி : மைனிங் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Mining Mate (Grade-I)

காலியிடங்கள் : 15 (UR-8, OBC-3, SC-2, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ.18,280 – 38,670

HCL

கல்வித்தகுதி : மைனிங் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : மேற்கண்ட 2 பணிகளுக்கும் 1.3.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

HCL

விண்ணப்பக் கட்டணம் :  ரூ. 500. விண்ணப்பக் கட்டணத்தை Hindustan Copper Limited என்ற பெயரில் Malanjkhand – ல் மாற்றத்தக்க வகையில் டி.டி ஆக எடுக்க வேண்டும். SC/ST / முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.hindustancopper.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து இணைத்து பதிவு தபால் / விரைவு தபால் / கொரியர் மூலம் அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது ” Name of the post Applied ……………… “ என்று குறிப்பிடவும்.

HCL

அனுப்ப வேண்டிய முகவரி :

AGM (Administration) – HR,

Hindustan Copper Limited,

Malanjkhand Copper Project,

Tehsil : Birsa,

P.O. – Malanjkhand,

District – Balaghat,

Madhya pradesh – 481 116.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்