IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – 2021

IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – idbi careers 2021

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான IDBI  (idbi careers) வங்கியில் Assistant Manager பணிக்கு 650 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt No.: 5/2021-22

1. பணியின் பெயர் : Assistant Manager Grade – A

காலியிடங்கள் : 650 (UR-265, SC-97, ST-48, EWS-65, OBC-175)

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 21 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST/OBC/PWD  பிரிவினர்களுக்கு மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

IDBI Careers 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் IDBI வங்கி சார்பாக ஒரு வருட Post Graduate Diploma in Banking Finance (PGPBF)  படிப்பிற்கு அனுப்பப்படுவர். இதற்கு கல்விக்கட்டணமாக ரூ. 3,50,000 செலுத்த வேண்டும்.

கல்விக்கட்டணத்தை IDBI வங்கி மூலமாக Education Loan பெற்று செலுத்தலாம். ஒரு வருட படிப்பின் போது முதல் 9 மாதங்கள் ரூ. 2500 அடுத்த மூன்று மாதங்கள் ரூ. 10,000 வீதமும், உதவித்தொகை வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு Assistant Manager  பணி வழங்கப்படும். 

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடம் : கோவை, சென்னை 

தேர்வு நடைபெறும் நாள் : 4.9.2021

தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000 (SC/ST பிரிவினருக்கு மட்டும்  ரூ. 200) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

How to Apply for IDBI Bank Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.idbibank.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 22.8.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்