1. அண்ணா பல்கலைக்கழகத்தில் Driver பணி :
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Energy Studies Institute – ல் Peon Cum Driver பணிக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
IES/Rectt/Peon Cum Driver/2021
பணியின் பெயர் : Peon Cum Driver
சம்பளவிகிதம் : ரூ. 431 (Per Day)
கல்விக்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிககும் முறை : தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவுடன், புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Dr. M. Venkata Ramanan,
Professor & Director Institute for Energy Studies,
Anna University,
Chennai – 600 025
E – Mail ID : dires@annauniv.edu
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.annauniv.edu என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
iit madras recruitment
2. அண்ணா பல்கலைக் கழகத்தில் Watchman பணிகள் :-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச தங்கும் விடுதியில் Watchman பணிகளுக்கு தகுதியாவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு.
Ref.Advt.No.01/Au/IH/TEM/WM/2021 dated 8.11.2021
பணியின் பெயர் : Watchman
காலியிடங்கள் : 9
சம்பளவிகிதம் : ரூ. 370 (Per Day)
ஒப்பந்த காலம் : 6 மாதங்கள்
கல்வித்தகுதி : 9 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 23.11.2021 தேதிக்குள் தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டிய பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Executive Warden,
International Hostels,
Anna University,
Chennai – 600 025.
மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு annihostels@gmail.com அல்லது 044 2235-9827/ 9826 என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
iit madras recruitment
3. மெட்ராஸ் IIT – ல் உதவிப் பேராசிரியர் பணிகள் : –
சென்னையிலுள்ள Madras IIT -ல் உதவிப் பேராசிரியர் (iit madras recruitment) பணிக்கு SC / ST / OBC / EWS பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.IITM/R/5/2021 dated 3/11/2021
பணியின் பெயர் : Assistant Professor (Grade-II)
காலியிடங்கள் : 49 ( SC-13, ST-6, OBC-NCL-25, EWS-5)
சம்பளவிகிதம் : ரூ. 70,900 – 1,01,500
வயதுவரம்பு : EWS பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC / PWD பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Areospace Engineering / Applied Mechanics / Chemistry / Civil Engineering / Computer Science Engineering / Electrical Engineering / Engineering Design / Humanities & Social Science / Mathematics / Metallurgical & Materials Engineering / Ocean Engineering / Physics பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் Ph.D பட்டம் பெற்று 3 வருட ஆசிரியர் / தொழிற்துறை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iit madras recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் வகுப்பு இரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.iitm.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.12.2021