இந்திய இராணுவ (indianarmy recruitment) தொழிற்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BE / B.Tech. படிப்பிற்கான JEE MAIN EXAM – 2021 எழுதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பயிற்சியின் பெயர் : Technical Entry Scheme (COURSE-46)
காலியிடங்கள் : 90
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 16 1/2 முதல் 19 1/2 வயதிற்குள்ளிருக்க வேண்டும். அதாவது 2.7.2002- க்கும் 1.7.2005 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physics, Chemistry, Mathematics -ஐ ஒரு பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
indianarmy recruitment
உடற்திறன் தகுதி :
- 15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும்.
- Skipping ஆடத் தெரிந்திருக்க வேண்டும்.
- Pushups – 20
- Sit Ups – 20
- Chin Ups – 8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- செங்குத்தான கயிற்றில் 3.4 கி.மீ தூரம் எறிக் கடக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் +2 மற்றும் JEE Main Exam – ல் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். SBB நேர்முகத்தேர்வானது Stage – I & Stage – II என இரு கட்டங்களாக நடைபெறும்.
Stage – I தேர்வில் உளவியல் மற்றும் குழுவிவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு Stage – II -வில் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத்தேர்வு நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் : Allahabad (UP), Bhopal (MP), Bengaluru (Karnataka), Kapurthala (Punjab).
SSB நேர்முகத்தேர்விற்கான Call Up Letter – ஐ இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவப் பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழிற்நுட்ப பயிற்சி 4 வருடமும் வழங்கப்படும்.
indianarmy recruitment
பயிற்சி ஆரம்பமாகும் தேதி : ஜனவரி – 2022
5 வருட பயிற்சி முடித்த பின் இராணுவத்தில் Lieutenant -ஆக பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
SSB நேர்முகத்தேர்வின் போது கல்வித்தகுதி சான்றிதழ், வயதுசான்று, JEE Main தேர்வு மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட்அவுட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.11.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இராணுவத்தில் வேலை : –
இந்திய இராணுவத்தில் (indianarmy recruitment) லெப்டினன்ட் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
indianarmy recruitment
1. பணியின் பெயர் : லெப்டினன்ட் (NCC Special Entry)
காலியிடங்கள் : 55
ஆண்கள் : 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது.)
பெண்கள் : 5 (இதில் ஒரு இடம் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது.)
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இளநிலை பட்டம் பெற்று NCC – ல் 2 வருட பயிற்சி பெற்று ‘C’ சான்று பெற்றிருக்க வேண்டும்.
போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வித்தகுதி : இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
indianarmy recruitment
உடற்தகுதி :
ஆண்கள் : 152 செ.மீ. உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் : உயரம் : 148 செ.மீ. , எடை : 42 கிலோ.
உடற்திறன் தேர்வு : 2.4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடிக்கடக்க வேண்டும்.
- Sit Ups – 25
- Push Ups – 13
- Chin Ups – 6 எடுக்கும் திறன் மற்றும் 3 – 4 மீ. தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் SSB நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
SSB நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : Allahabad, Bhopal, Bangalore, Kapurthala.
தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு AC 3 – Tier ரயில் / பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
SSB நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்துச் சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA, Chennai) 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.11.2021.