barc recruitment

பொதுத்துறை நிறுவமான IOCL (Indian Oil Corporation Limited)-ல் வேலை -iocl recruitment 2022

பொதுத்துறை நிறுவான IOCL நிறுவனத்தில் ITI / Diploma / பட்டபடிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் (iocl recruitment) அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

iocl recruitment

பயிற்சியின் பெயர் :

i) Trade Apprentice

ii) Technician Apprentice

மொத்த காலியிடங்கள் : 570

(டிரேடு வாரியாக காலியிடங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்)

வயதுவரம்பு : 31.1.2022 தேதியின் படி 18 முதல் 24 – க்குள் இருக்க வேண்டும். SC / ST / OBC / PWD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Trade Apprentice : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter / Electrician / Electronic Mechanic / Instrument Mechanic / Machinist / Electrical போன்ற ஏதாவது ஒரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical / Electrical / Instrumentation / Civil / Electronics / Electrical & Electronics போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Data Entry Operator / Retail Sales Associate : டிரேடில் பயிற்சி பெற +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts : டிரேடில் பயிற்சி பெற Accountancy பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

iocl recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : IOCL – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சி தேர்வு செய்யப்படுவர். பயிற்சியானது Data Entry Operator – க்கு 15 மாதங்களும், Retail Sales Associate – க்கு 14 மாதங்களும் வழங்கப்படும். ITI மற்றும் Diploma படித்தவர்களுக்கு 12 மாதங்களும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.iocl.com/careers/apprenticeship  என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தேர்விற்கான அட்மிட் கார்டு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

இணையதளத்திலிருந்தும் டவுண்லோடு செய்து கொள்ளவும். ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்கள், ஒரு வருடத்திற்கு அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள், படிப்பை முடித்து 3 வருடம் நிறைவு செய்வதர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.2.2022.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்