சென்னையிலுள்ள இராணுவ ” Officers Training Academy ” – ல் இராணுவ அதிகாரிப் பணிகளுக்கான (joinindianarmy careers) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
joinindianarmy careers
1. பணியின் பெயர் : Short Services Commission Officers (Tech. Non-Tech) Exam-2022
மொத்த காலியிடங்கள் : 191 (பாட வாரியான காலியிட விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது)
இதில் இரண்டு இடங்கள் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77.500
வயதுவரம்பு : 20 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விதவைகளுக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil / Mechanical / Electrical / Electronics / Telecommunication / IT / Architecture / Aeronautical / Avionics / Computer Science / Information Technology / Satellite Communication / Remote Sensing / Ballistics Engineering / Nuciear Technology / Laser Technology / Opto Electronics போன்ற பாடப்பிரிவுகள் அல்லது மேற்கண்ட பாடங்களை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
joinindianarmy careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : பொறியியல் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல் கட்ட நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். முதல் கட்ட தேர்வில் Psychological Test, Group Test மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
இதில் வெற்றி பெற்றவர்கள் 2-ம் கட்டமாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் இராணுவ அதிகாரி பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் PG Diploma in Defence Management and Strategic Studies என்னும் பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.
பயிற்சி முடிந்தவுடன் இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் அதிகாரியாக பணி அமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மூன்றாம் வகுப்பு A/C இரயில் கட்டணம் வழங்கப்படும். பயிற்சி ஏப்ரல் 2022-ல் ஆரம்பமாகும்.
விண்ணப்பிக்கும் முறை : www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2021
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.