தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தற்காலிமான இளநிலை மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு (latest government jobs) தேனி மாவட்ட சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
latest government jobs
1. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 13,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி இயக்குவதில் பணி அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 9,100
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
latest government jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மற்றும் புகைப்படம் ஒட்டிய ஆளறிச் சான்றிதழ், சுய முகவரியிட்ட அஞ்சல் உறை, அதில் ரூ.25 – க்கான தபால் தலை ஒட்டப்பட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “தேனி மாவட்டம் – பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பம் – 2022 “ என்று குறிப்பிடவும்.
latest government jobs
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தேனி .
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here