கோவை மாவட்ட அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு – Masani Amman Kovil Job Vacancy 2023
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Masani Amman Kovil Job Vacancy 2023
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 75,000/-
வயதுவரம்பு : 01.07.2023 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- MBBS (Qualified) Registered under TNMC.
2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse / MLPH)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 14,000/-
வயதுவரம்பு : 01.07.2023 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- DGNM (Diploma in General Nursing Midwife) – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tn hrce Jobs 2023
3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi Purpose Hospital Worker / Attender)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 6,000/-
வயதுவரம்பு : 01.07.2023 அன்று 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Masani Amman Kovil Job Vacancy 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Masani Amman Kovil Job Vacancy 2023
விண்ணப்பிக்கும் முறை : www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Latest hrce notification 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உதவி ஆணையர் / செயலர் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் – 642 104.Masani Amman Kovil Job Vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.06.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
Masani Amman Kovil Coimbatore
நிபந்தனைகள் :
- இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
- தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
- நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 11.06.2023 – ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தத்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பட வேண்டும்.
- வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
- நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
- விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பங்களுடன் அனுப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
- ராஜீகத்தாலும் தெய்விகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
- விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here