Repco வங்கியில் (repco bank career) கீழ் செயல்படும் Repco Home Finance நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
repco bank career
1. பணியின் பெயர் : Assistant Manager
சம்பளவிகிதம் : ரூ. 24,000
வயதுவரம்பு : 1.5.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். B.Com படித்திருப்பது விரும்பத்தக்கது. Assistant Manager பணிக்கு குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / வீட்டு கடன் (Housing Finance) வழங்கும் நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் புலமை பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 10 – ம் வகுப்பு, +2 வகுப்புகளில் குறைந்தது 50% -க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Executive / Trainee
சம்பளவிகிதம் : ரூ. 21,300
வயதுவரம்பு : 1.5.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். B.Com படித்திருப்பது விரும்பத்தக்கது. Assistant Manager பணிக்கு குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / வீட்டு கடன் (Housing Finance) வழங்கும் நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் புலமை பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 10 – ம் வகுப்பு, +2 வகுப்புகளில் குறைந்தது 50% -க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
repco bank career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ. 9,500. உதவித்தொகையாக வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.repcohome.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE