SBI – ல் ஜூனியர் அசோசியேட்ஸ் (Junior Associate) பணி – sbi recruitment 2021
பாரத வங்கியில் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில்) ஜீனியர் அசோசியேட்ஸ் (sbi recruitment 2021)பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advertisement No.: CRPD/CR/2021-22/09
பணியின் பெயர் : Junior Associate
காலியிடங்கள் : 473 (UR-206, OBC-127, SC-89, ST-4, EWS-47)
குறிப்பு : தமிழ்நாடு மட்டும் – 473, பாண்டிசேரி – 2 (UR-2)
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின் படி 20 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ. 19,900
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் preliminary தேர்வு மற்றும் Main Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். preliminary ஆன்லைன் தேர்வு மூன்று பிரிவாக நடைப்பெறும். (English, Language, Numerical Ability, Reasoning Ability) வினாத்தாள் கொள் குறிவகை வினாக்களைக் (Objective Type) கொண்டிருக்கும். இத்தேர்வு ஜூன் 2021 -ல் நடைப்பெறும்.
ஆன்லைன் Main தேர்வு நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும். (General / Financial Awareness, General English, Quantitative Aptitude, Reasoning Ability & Computer Aptitude)
Main Exam நடைப்பெறும் நாள் : 31.7.2021
sbi recruitment 2021
முதல் நிலைத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் 1.6.2021 -ம் தேதியிலிருந்து வங்கி இணையதள முகவரியிலிருந்து பதிவேற்றம் செய்துக் கொள்ளவும். முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றவர்கள் Main Exam அழைப்புக் கடிதம் 19.7.2021 – ம் தேதியிலிருந்து இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். Main தேர்வுக்கு செல்பவர்கள் முதல்நிலை அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை Main தேர்வு அழைப்புக் கடிதம் வைத்திருக்கவும், அழைப்புக் கடித்தில் ஒரு புகைப்படம் ஒட்டவும். மேலும் 2 புகைப்படம் கூடுதலாக வைத்திருக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்கள் விபரங்களை www.bank.sbi/careers என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவும். பதிவு செய்த பின்பு www.sbi.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் இடது கை பெரு விரல் ரேகை மற்றும் சான்றிதழ்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.