ibps recruitment

மத்திய அரசில் சுங்கவரி துறையில் பல்வேறு பணிகள் -Tax assistant jobs 2021-22

சுங்கவரி துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை : – 

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி துறையில் (Tax assistant jobs) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் :  TAX Assistant

காலியிடங்கள் : 10

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு :  1.9.2021 தேதியின்படி வயதுவரம்பு 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடமும், பொது மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் Computer Application -ல் அறிவுத்திறன் பெற்றவராகவும், ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Tax assistant jobs

2. பணியின் பெயர் :  Stenographer Gr-II

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு :  1.9.2021 தேதியின்படி வயதுவரம்பு 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடமும், பொது மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2  தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஒரு நிமிடத்தில் 80 வார்த்தைகள் எழுதும் திறனும், 50 நிமிடத்தில் ஆங்கிலத்திலும் , 65 நிமிடத்தில் ஹிந்திலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் :  Havaldar

காலியிடங்கள் : 10

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு :  1.9.2021 தேதியின்படி வயதுவரம்பு 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடமும், பொது மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tax assistant jobs

உடற்திறன் தகுதி  :

ஆண்கள் :

உயரம் : 157.5 செ.மீ.

மார்பளவு : 81 செ.மீ

15 நிமிடத்தில் 1600 மீட்டர் தூரத்தை நடந்து கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 30 நிமிடத்தில் 8 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்  :

உயரம் : 152  செ.மீ

எடை : 48 கி.கி

20 நிமிடத்தில் ஒரு கி.மீ தூரத்தை நடந்து கடக்கும் திறனும், 25 நிமிடத்தில் 3 கி.மீ சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :  Multi Tasking Staff

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு :  1.9.2021 தேதியின்படி வயதுவரம்பு 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடமும், பொது மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tax assistant jobs

விளையாட்டு தகுதி :  Cricket / Hockey / Football / Athletics / Swimming / Badminton போன்ற ஏதாவதொரு விளையாட்டு பிரிவுகளில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுக்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத்தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வு, Data Entry Speed Test, Skill Test, Physical  Standard & Physical Efficiency Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :    www.cbic.gov.in   மற்றும்  www.dgpm.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, விண்ணப்பப் படிவத்தை கருப்பு Ball point பேனாவால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 5.11.2021 தேதிக்கு முன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Assistant Director (Cadre) Directorate General of Performance Management,

Central Board of Indirect Taxes and Customs,

Drum Shape Building, 

IP Bhawan,

IP Estate, 

New Delhi – 110 002.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.