மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தியாகராசர் கல்லூரியில் (tcarts recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணியின் பெயர் பின்வருமாறு :
1. இளநிலை உதவியாளர்
2. தட்டச்சர்
3. ஆய்வுக்கூட உதவியாளர்
4. பதிவறை எழுத்தர்
5. நூலக உதவியாளர்
6. அலுவலக உதவியாளர்
7. பெருக்குபவர்
8. காவலர்
9. குடிநீர் கொணர்பவர்
10. துப்புரவாளர்
11. தோட்டக்காரர்
12. குறியீட்டாளர்
ஜாதி வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் மற்றும் கல்வித்தகுதி பற்றிய கூடுதல் விபரங்களை இணையதள முகவரியில் பார்க்கவும்.
tcarts recruitment
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளுக்குட்பட்டது.
விண்ணப்பிக்கும் முறை : www.tcarts.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 12.10.2021 தேதிக்குள் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செயலர் ,
தியாகராசர் கல்லூரி,
139-140, காமராசர் சாலை,
தெப்பக்குளம்,
மதுரை – 9.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.