தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் TET (tet exam) தேர்வு நடத்தப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tet exam
தேர்வின் பெயர் : Tamil Nadu Teachers Eligibility Test (TN TET)
வயதுவரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
1. 1 – ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணி புரிய குறைந்தது 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று, Diploma in Elementary Education படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பானது குறைந்தபட்சம் 2 வருட கால அளவினை கொண்டதாகவும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
2. 6 – ம் வகுப்பு முதல் 8 – ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணி புரிய, குறைந்தபட்சம் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து 2 வருட Diploma in Elementary Education படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed படிப்பானது NCTE அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
TN TET தேர்வு பற்றி விபரம் :
இத்தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. +2 தேர்ச்சியுடன் Diploma in Elementary Education படித்தவர்கள் தாள் – I க்கான தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். பட்டப்படிப்புடன் Diploma in Elementary Education அல்லது B.Ed பட்டம் பெற்றவர்கள் தாள் – I மற்றும் தாள் – II தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். தாள் – I மற்றும் தாள் – II தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் Hall Ticket மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் TRB இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
tet exam
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. (SC / ST / SCA / PWD பிரிவினர்களுக்கு ரூ.250.) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here