tn jobs

சிவகங்கை / தஞ்சாவூர் / புதுக்கோட்டை/கன்னியாக்குமரி/ விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு துறையில் பணிகள் – tn govt jobs 2021- 2021

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு :

1. பட்டதாரிகளுக்கு ஊரக வளர்ச்சி துறையில் வேலை :

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் (tn govt jobs) கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

பணியின் பெயர் : Enterprise Development Officer

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பத்தாரரின் கல்வித்தகுதி, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன், ஊரக வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி பற்றிய அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnrtp.org  என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் 15.11.2021 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

A. Santhi,

DEO, TRTP,

Multipurpose Building,

Melur Road,

Sivagangi – 630 561.

E-Mail ID : svg.tnrtp@yahoo.com

Ph : 04575 – 240721.

 

2. எழுத்தர் / உதவியாளர் / காவலர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை : – 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சிவகங்கை மண்டலத்தில் நெல் கொள் முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

ந.க.எண்.:ஏடி2/5093/2019

1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்.

காலியிடங்கள் : 28

சம்பளவிகிதம் : ரூ. 2,410 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்

காலியிடங்கள் : 20

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : +2  தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : பருவகால காவலர்

காலியிடங்கள் : 21

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 10.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம், (சிவகங்கை)

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

சிவகங்கை – 630 561.

 குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

 

3. புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவுப் பிரிவிற்கு கணினி உதவியாளர் தேவை :-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு.

செ.வ.எண்.: 625, நாள் : 25.10.2021

பணியின் பெயர் : கணினி உதவியாளர்

காலியிடங்கள் : 13

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் MS Office, அனுபவம் பெற்று, ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய பெயர் / தாய், தந்தை பெயர் / தேசிய இனம் / வகுப்பு / பிறந்த தேதி / இருப்பிட முழு முகவரி / தொலைபேசி எண் / கல்வித்தகுதி / தொழில்நுட்ப தகுதி / கணினித்தகுதி / முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து கையொப்பம் இட்டு விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றில் Gazatted Officer – ன் கையொப்பம் பெற்று 16.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியர்,

சத்துணவுத் திட்டப்பிரிவு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

புதுக்கோட்டை

 

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 178 பேருக்கு வேலை 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், புதுக்கோட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதியானவர்களின் அடிப்படையில் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

ந.க.எண்.: இ3 / 2732 / 2021 , நாள் : 06/10/2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 34

சம்பளவிகிதம் : ரூ. 2410 – 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்

காலியிடங்கள் : 100

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : +2  தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : பருவகால காவலர்

காலியிடங்கள் : 44

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 11.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம் (புதுக்கோட்டை),

நுகர்பொருள் வாணிபக்கழகம்,

கல்யாணராமபுரம் முதல் வீதி,

திருக்கோகர்ணம்,

புதுக்கோட்டை – 622 002.

குறிப்பு : புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விழுப்புரம் மாவட்டம் வேலை வாய்ப்பு :

5. TNCSC – ல் 8 / பட்டப்படிப்பு தகுதிக்கு 156 காலியிடங்கள் :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விழுப்புரம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதியானவர்களின் அடிப்படையில் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

ந.க.எண்.: இ4 / 1857 / 2021 , நாள் : 29/10/2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 78

சம்பளவிகிதம் : ரூ. 2410 – 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவகால காவலர்

காலியிடங்கள் : 78

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 15.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம் (விழுப்புரம்),

நுகர்பொருள் வாணிபக்கழகம்,

நம்பர் – 1, ஆஸ்பிட்டல் ரோடு,

விழுப்புரம்.

குறிப்பு : விழுப்புரம் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

 

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் :-

6. மருத்துவ கல்வித்துறையில் வேலைவாய்ப்பு :

அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

1. பணியின் பெயர் : Emergency Department [ED] Secretary

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 20,000

கல்வித்தகுதி : Accident and Emergency Care / Physician Assistant – ல் இளநிலைப் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Trauma Registry Assistants

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : Nursing பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer  – ல் பணி புரியும் திறன்  பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : OT Technician

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் 3 மாத OT Technician பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 15.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

முதல்வர்,

அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

தஞ்சாவூர்.

 

குமரி மாவட்டம் வேலைவாய்ப்பு செய்தி :-

7. பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் & நூலகர் பணிகள் :

குமரி மாவட்டம் பழ விளையிலுள்ள காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியாவனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர்  : Lecturer

காலியிடங்கள் : 13

பாடவாரியாக காலியிட விபரம் & இடஓதுக்கீடு வருமாறு.

1. Civil – 2 (GT-1, SC(A)- 1)

2. Mechanical – 4 (MBC-1, BC-1, SC -1, GT-1)

3. Electrical & Electronics – 5 (MBA / DNC -1, BC-2, GT-2)

4. Mathematics – 1 (GT)

5. English – 1 (SCA)

சம்பளவிகிதம் : ரூ. 56,100

வயதுவரம்பு : 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொறியியல் பாடப்பிரிவிற்கு முதல் வகுப்பு B.E /B.Tech. பட்டம் பெற்று இருக்க வேண்டும்.  கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்  : Librariyan

காலியிடங்கள் : 1 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 57,700

வயதுவரம்பு : 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : நூலக அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று SLET / NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்  : Physical Director

காலியிடங்கள் : 1 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 57,700

வயதுவரம்பு : 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physical Education பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று  SLET / NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்  : Junior Assistnat

காலியிடங்கள் : 1 (BC)

சம்பளவிகிதம் : ரூ. 19,500

வயதுவரம்பு : 18 முதல் 34 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபாலில் 12.11.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Secretary / Correspondent,

N.M.S. Kamaraj Polytechnic College,

Pazhavilai,

kanyakumari District

Pin Code – 629 501.

 

காரைக்குடி வேலைவாய்ப்பு செய்தி :

8. CSIR-CECRI – ல் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீஷியன் பணிகள் :

காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

Advt.No.:02/2021

1. பணியின் பெயர் : Technical Assistant

காலியிடங்கள் : 41 (UR-19, UR(HH)-1, UR(LV)-1, ST-4, OBC-12, EWS-4)

கல்வித்தகுதி : Chemistry / Physics / Microbiology / Biotechnology / Computer Science / Information Technology / Hotel Management / Mathematics / Electronics and Communication Engineering / Electrical and Electronics Engineering / Electronics and Instrumentation Engineering / Mechanical Engineering / Refrigeration & AC Engineering / Civil Engineering / Computer Science Engineering  இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Technician 

காலியிடங்கள் : 13 (UR-6, UR(MD)-1, UR(LV)-1, SC-2, OBC-2, EWS-1)

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician / Wireman / Mechanic / Fitter / Machinist / Welding / Computer Operator and Programming Assistant / Cookery or Food Production இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேசிய / மாநில அளவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் 1 மற்றும் 2 – க்கான வயதுவரம்பு : 27.9.2021 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், ST பிரிவினருக்கு 5 வருடங்களும், UR(LV) மற்றும் UR(MD) பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cecri.res.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 15.12.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

CSIR – Central Electrochemical Research Institute,

Council of Scientiffic and Insustrial Research,

Karaikudi – 630 003.

Tamil Nadu, India

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்