1. தமிழ்நாடு மீன்வள உதவியாளர் பணிகள் : –
ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் (tn govt jobs) காலியாக உள்ள மீன் வள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : மீன் வள உதவியாளர்
காலியிடங்கள் : 5
வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடங்கள் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத்துறை பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதை பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்பவும் அல்லது நேரில் கொண்டு சேர்க்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
உதவி இயக்குநர் அலுவலகம்,
சுப்புராம் காம்ப்ளக்ஸ்,
2 – வது தளம்,
கலெக்டர் அலுவலகம் அருகில்,
ஈரோடு – 638 011.
கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பம் பெற adferode1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.
2. இந்து சமய அறநிலைத் துறையில் டாக்டர் மற்றும் நர்ஸ் பணிகள் : –
இந்து சமய அறநிலைத் துறையில் உள்ள திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 75,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் TNMSE – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing & Midwifery – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 6,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
சமயபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 112.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT