புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளராக (tn govt recruitment) தொகுப்பூதியம் அடிப்படையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tn govt recruitment
பணியின் பெயர் : பகுதி நேர தூய்மைப்பணியாளர்
மொத்த காலியிடங்கள் : 15 (ஆண்கள் -12, பெண்கள்- 03)
ஆண் காலியிடங்கள் : 12
இனச்சுழற்சி (ஆண்) :
முன்னுரிமை (Priority) :
- GT – 01 (முதல் பட்டதாரி)
- SC – 01 (தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற நபர்கள்)
முன்னுரிமையில்லாதது (Non-priority) :
- GT – 01 (மாற்று திறனாளி – காது கேளாதோர்)
- GT – 01
- BC (O) – 03
- BC – 01
- SCA – 01
- MBC/DNC – 02
பெண் காலியிடங்கள் : 03
இனச்சுழற்சி (பெண்) :
முன்னுரிமை (Priority) :
- GT – 01 (கொரனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்)
முன்னுரிமையில்லாதது (Non-priority) :
- BC – 01
- MBC/DNC-01
சம்பளவிகிதம் : ரூ. 3000
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / BCM / MBC / DNC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
tn govt recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.5.2022 ( மாலை 5 மணிக்குள் )
மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn govt recruitment
குறிப்பு :
- ஏற்கனவே பணிபுரிந்த அரசுத்துறை / அரசு அலுவலகத்திலிருந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அம்மனுதாரங்களின் மனு நிராகரிக்கப்படும்.
- குற்ற வழங்குகள், நீதி மன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அரசியலில் பங்கேற்று அதற்கான தண்டனை பெற்றவர்கள் மனு நிராகரிப்படும்.
- மனுலில் அனைத்து விவரங்களும் உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமையான விபரங்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் உரிய ஆதாரங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிப்படும்.
- விதிமுறைகளுக்குப்பட்டு நேர்காணலில் தேர்வில் எழுதுதல், படித்தல் உட்பட தகுதி பெறும் விண்ணப்பதார்களில் சான்று சரிபார்க்கப்பட்டு இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள்.
- விண்ணப்பம் ஏற்கப்பட்ட மனுதாரர்களுக்கு நேர்காணல் மாவட்ட அளவில் நடைபெறும்.
- முன்னுரிமை இனம் குறிப்பிடப்பட்டுள்ளோர், அதற்கான சான்றின் நகலினை கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
- வயது, ஜாதி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றிற்கு உரிய சான்றிதழ் இணைக்கபட வேண்டும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here