தமிழ்நாடு (tncsc jobs) நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 72
சம்பளவிகிதம் : ரூ. 2410 + ரூ. 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / SC (A) பிரிவினருக்கு 5 வருடங்களும், MBC / BC / BC (M) / MBC (V) பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc jobs
2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்
காலியிடங்கள் : 67
சம்பளவிகிதம் : ரூ. 2359 + ரூ. 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / SC (A) பிரிவினருக்கு 5 வருடங்களும், MBC / BC / BC (M) / MBC (V) பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவகால காவலர்
காலியிடங்கள் : 296
சம்பளவிகிதம் : ரூ. 2359 + ரூ. 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / SC (A) பிரிவினருக்கு 5 வருடங்களும், MBC / BC / BC (M) / MBC (V) பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc jobs
விண்ணப்பிக்கும் முறை : திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
முகவரி : –
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல் திருவாரூர்.
குறிப்பு : விண்ணப்பங்கள் 05.11.2021 மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதள முகவரி : www.tncsc.tn.gov.in .
2. திருச்சி NIT – ல் SRF (Senior Research Fellow) பணி – 2021-22
திருச்சி NIT – ல் காலியாக உள்ள கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.:NITT/ICE/DST-DPP/SRF/2021
1. பணியின் பெயர் : Senior Research Fellow
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : Instrumentation / Electronics போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளை முக்கியப் பாடமாகக் கொண்டு B.E / B.Tech. பட்டம் பெற்று GATE – தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Design of Sensors / Signal Conditioning / Signal Process System துறையில் குறைந்தது இரண்டு வருட ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 11.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். .