சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் (tnhrce) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnhrce
1. பணியின் பெயர் : உதவி மின் பணியாளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical / Wireman பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : கடைநிலை ஊழியர்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : திருவிலகு
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : இரவுக்காவலர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
tnhrce
6. பணியின் பெயர் : உதவி கைங்கர்யம்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : சன்னதி தீவட்டி
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : திருக்கோயிலில் தீவட்டி பணி பார்த்த அனுபவம் மற்றும் தீவட்டி தயாரித்து பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : உதவி பரிச்சாரகர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப்படிக்கவும், திருக்கோயிலின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : கால்நடை பராமரிப்பு
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500
வயதுவரம்பு : 1.4.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
tnhrce
தேர்த்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.hrce.tn.gov.in மற்றும் parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணை ஆணையர்,
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி,
சென்னை – 5.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.