திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் (tnhrce recruitment) இணை ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnhrce recruitment
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 3 (UR-1, SC -1, MBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : ஓட்டுநர்
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி மற்றும் இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : இரவுக் காவலர்
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சியின்மை மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும்.
tnhrce recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மற்றும் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பும் தாபல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
4/15, காந்தி நகர்,
7 – வது தெரு,
திருவண்ணாமலை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here