current affairs january 2022

tnpsc group 4 model question paper

TNPSC GROUP-IV தேர்வுக்கான மாதிரி வினா-விடைகள் : பயிற்சி – 4 tnpsc group 4 model question paper

பொதுத்தமிழ் : – 

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் TNPSC தேர்வில் புதிய விதிமுறைப்படி Group-IV & II / II-A முக்கியமான கேள்விக்கள் அடங்கிய (tnpsc group 4 model question paper) மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

tnpsc group 4 model question paper

1. அகநானூறுக்கு வழங்கும் வேறு பெயர்களில் எது சரியானது ? 

a) நெடுந்தொகை

b) பெருந்தொகை நானூறு

C) அகப்பாட்டு

d) மேற்கண்ட அனைத்தும்

 

2. பிள்ளைத்தமிழின் அமைப்பில் எந்தப் பருவத்தில் ஒரு காலை மடித்து, ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றி வரும் பருவம் ?

a) சப்பாணி

b) முத்தம்

C) வருகை

d) செங்கீரை

 

3. “சடகோபர் அந்தாதி” என்ற நூலை எழுதியவர் யார் ?

a) காளிதாசர்

b) வால்மீகி

C) வியாசர்

d) கம்பர்

 

4. “திருப்பாவையே வேதம் அனைத்திறகும் வித்து”  எனக் கூறியவர் யார் ?

a) சுவாமி விவேகானந்தர்

b) இராமானுஜர்

C) இராமகிருஷ்ணர்

d) சுவாமி தயானந்த சரஸ்வதி

 

5. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க :

I. சித்தர்கள் பெரும்பாலானோர் சைவர்கள்

II. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பவர்கள்.

III. சித்துகள் 8 வகைப்படும். இவற்றை அட்டமாரித்திகள் என்பர்.

இவற்றில்,

a) I, II மட்டும் சரி

b) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி 

d) அனைத்தும் சரி

 

6. பெண்களின் பருவங்களில் பேதை என்பதன் வயது

a) 5 வயது முதல் 8 வயது வரை

b) 4 வயது முதல் 7 வயது வரை

C) 6 வயது முதல் 10 வயது வரை

d) 5 வயது முதல் 7 வயது வரை

 

7. கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது ?

a) தாயுமானவர் – திருமறைக்காடு

b) சேக்கிழார் – குன்றத்தூர்

C) ஜெயங்கொண்டார் – தீபங்குடி

d) சீத்தலைச் சாத்தனார் – பூம்புகார்

 

8. பின்வரும் பாடல்களில் கவிமணி இயற்றாத பாடல் அமைந்த தொடர் எது ?

a) பாட்டியின் வீட்டுப் பழம்பானை

b) கால நதியின் கதியதனில்

C) ஊக்கம் உடையவர்க்குத் துன்பம் உலகில் இல்லையம்மா

d) மாந்தருக்குள் போர் வெறிகள் மறைய வேண்டும்.

 

9. கடலுக்கு அருகில் நிலத்தால் பிரிக்கப்பட்டு மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு …………… எனப் பெயர்.

a) உப்பங்குளம் 

b) உப்பு வயல்

C) உப்புங்கழி

d) உப்புத் திடல்

 

10. புணர்ச்சி விதி தருக :

“பெருங்கடல்”

a) ஈறுபோதல் முன்னின்ற மெய்தரிதல் 

b) ஈறுபோதல்

C) ஈறுபோதல், இனமிகல்

d) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்

 

tnpsc group 4 model question paper

 

11. கீழ்க்கண்டவற்றுள் தோப்பில் முகமது மீரானின் சாகித்திய அகாடாமி பரிசு பெற்ற நூல் எது ?

a) ஒரு குட்டி தீவின் வரைபடம்

b) சாய்வு நாற்காலி

C) கூனன் தோப்பு

d) துறைமுகம்

 

12. விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி ………… ஆகும்.

a) உவமை

b) உருவகம்

C) படிமம்

d) குறியீடு

 

13. தனது வறுமைமிக்க தன் இளமை வாழ்வை சார்லி சாப்ளின் ……….. என்ற வெற்றிப் படமாக்கினார்.

a) தி கிட்

b) சிட்டி லைட்ஸ்

c) தி கோால்டு ரஷ்

d) தி கிரேட் டிக்டேட்டர்

 

14. “விருந்து படக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து” இவ்விடிவில் அடிக்கோடிட்ட சொல்லுக்குரிய இலக்கண குறிப்பைத் தேர்க.

a) பண்புத்தொகை

b) எண்ணும்மை

c) வினைத்தொகை

d) பெயரச்சம்

 

15. “சொற்கேட்டார்க்கு பொருள் கண் கூடாதல்” என்று கூறியவர் யார்?

a) நச்சினார்க்கினியர்

b) தொல்காப்பியம்

c) இளம்பூரணர்

d) சேனாவரையர்

 

16. கூற்று 1: வாழ்த்துதல், செல்வத்தை வனங்குதல், வருபொருள் உரைத்தல் என்று மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பொற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.

கூற்று 2 : அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ, இரண்டோ குறைந்து வருவது பெருங்காப்பியமாகும்.

a) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

b) இரண்டும் சரி

c) இரண்டும் தவறு

d) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

 

17. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

a) திருவாசகம்

b) திருக்குறள்

c) திரிகடுகம்

d) திருப்பாவை

 

18. பெயர்ச்சொல்லின் வகை அறிக “இனிப்பு”

a) பொருட்பெயர்

b) சினைப்பெயர்

c) பண்புப்பெயர்

d) காலப்பெயர்

 

19. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக :

a) வேண்டும் பருக நாவினிக்க கம்பன் தமிழை

b) பருக வேண்டும் கம்பன் தமிழை நாவினிக்க

c) நாவினிக்க தமிழை கம்பன் பருக வேண்டும்

d) கம்பன் தமிழை நாவினிக்க பருக வேண்டும்

 

20. பட்டியல் I – ல் நூல்களை பட்டியல்  II -ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:

  பட்டியல் I                     பட்டியல் II

A. தேவாரம்                  1. பெருங்கௌசிகனார்

B. நாலாயிர                  2. நப்பூதனார்
திவ்வியப்
பிரபந்தம்

C. மலைப்படுகடாம்  3. திருஞான சம்பந்தர்

D. முல்லைப்பாட்டு    4. நம்மாழ்வார்.

        A        B        C        D

a)     2        3        4        1

b)     3        4        1        2

c)     1        2        3        4

d)     4        3        2        1

 

tnpsc group 4 model question paper

 

21. இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் – யார் ?

a) துன்பத்திற்குத் துன்பம் தருபவர்

b) துன்பம் கண்டு துவள்பவர்

c) துன்பம் கண்டு விலகுபவர்

d) மகர கவியாழ்வார்

 

22. ‘விஷ்ணு சித்தர்’ என்ற இயற்பெயரை உடைய ஆழ்வார் யார் ?

a) திருமழிசையாழ்வார்

b) பெரியாழ்வார்

c) திருமங்கையாழ்வார்

d)மகர கவியாழ்வார்

 

23. பின்வரும் வாக்கியங்களைக் கவனி.

கூற்று (A) : நாஞ்சில் நாட்டு மருமக்கள் தாய்முறையக் கண்டித்து எழதப்பட்டது மருமக்கள் வழி மான்மியம்

காரணம் (R) : மருமக்கள் வழி மான்மியம் சோகம் நிறந்த இலக்கியம். 

a) (A) மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) -விற்கான சரியான விளக்கம் ஆகும்.

b) (A) சரி ஆனால் (R) தவறு

c) (A) தவறு ஆனால் (R) சரி

d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) – விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

24. உரிப்பொருள்          திணை

a) ஊடலும் ஊடல்      –    மருதம்
நிமித்தமும்      

b) பிரிதலும் பிரிதலம் – முல்லை
நிமித்தமும்

c) இரங்கலும் இரங்கல்- நெய்தல்
நிமித்தமும்

d) இருந்தலும் இருத்தல் – பாலை
நிமித்தமும்

 

25. பிறமொழிச் சொல்லில்லாத் தொடரைத் தேர்க:  

a) ஸ்டேஷனரி ஷாப்பில் புத்தகம் வாங்கினேன்

b) எழுதுபொருள் அங்காடியில் புத்தகம் வாங்கினேன்

c) எழுதுபொருள் அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்

d) ஸ்டேஷனரி அங்காடியில் புத்தகம் வாங்கினேன்

 

விடைகள் :

1. d) மேற்கண்ட அனைத்தும்

2. d) செங்கீரை

3. d) கம்பர்

4. b) இராமானுஜர்

5. b) I, III மட்டும் சரி

6. d) 5 வயது முதல் 7 வயது வரை

7. d) சீத்தலைச் சாத்தனார் – பூம்புகார்

8. d) மாந்தருக்குள் போர் வெறிகள் மறைய வேண்டும்.

9. C) உப்புங்கழி

10. C) ஈறுபோதல், இனமிகல்

11. b) சாய்வு நாற்காலி

12. C) படிமம்

13. b) சிட்டி லைட்ஸ்

14. a) பண்புத்தொகை

15. b) தொல்காப்பியம்

 16. a) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

17. b) திருக்குறள்

18. c) பண்புப்பெயர்

19. d) கம்பன் தமிழை நாவினிக்க பருக வேண்டும்

20. b)     3        4        1        2

21. a) துன்பத்திற்குத் துன்பம் தருபவர்

22. c) திருமங்கையாழ்வார்

23. b) (A) சரி ஆனால் (R) தவறு

24. c) இரங்கலும் இரங்கல் – நெய்தல்
நிமித்தமும்

25. b) எழுதுபொருள் அங்காடியில் புத்தகம் வாங்கினேன்

 

TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 3

TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 5

 

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்