1. தமிழ்நாடு புள்ளியியல் துறையில் பட்டதாரிகளுக்கு வேலை :
தமிழ்நாடு புள்ளியியல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு TNPSC – (tnpsc jobs ) ஆல் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.:596
Notification No.:16/2021 Dated 20.10.2021
1. பணியின் பெயர் : Computer Cum Vaccine Store Keeper
காலியிடங்கள் : 30
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 18 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Block Health Statistician
காலியிடங்கள் : 161
சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 65,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics அல்லது Economics பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tnpsc jobs
3. பணியின் பெயர் : Statistical Assistant
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 35,900 – 1,13,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics அல்லது Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Statistical Tools -ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Paper-I & Paper – II என இரு நிலைகளில் நடைபெறும்.
எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் : சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் உதகமண்டலம்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 9.1.2022
நேரம் : 10.00 am to 1.00 pm. – 3.00 pm to 5.00 pm.
2. முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணிகள் :-
தமிழ்நாடு Evalution and Applied Research துறையில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.:597/Notification No.:17/2021
1. பணியின் பெயர் : Research Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 36,900 – 1,16,600
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Economics / Econometrics / Business / Administration / Mathematics / Agricultural Economics / Sociology / Anthropology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tnpsc jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் TNPSC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 22.1.2022
மேற்கண்ட இரு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் 19.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.