TNPSC Group -IV தேர்விற்கான மாதிரி வினா – விடைகள் : பயிற்சி – 5 (Tnpsc model questions paper)
பொது அறிவியல் : –
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் TNPSC தேர்வில் புதிய விதிமுறைப்படி Group-IV & II / II-A முக்கியமான கேள்விக்கள் அடங்கிய (tnpsc model question paper) மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
Tnpsc model questions paper
1. கிரப் சுழற்சி கீழ்க்கண்ட எவற்றில் நடைபெறுகிறது ?
a) பசுங்கணிகம்
b) ஸ்ட்ரோமா
c) புறத்தோல் துளை
d) மைட்ரரோகாண்ரியாவின் உட்புறச் சவ்வு
2. விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்தவர் ?
a) ‘O’ வகை
b) ‘AB’ வகை
c) ‘A’ மற்றும் ‘B’ வகை
d) அனைத்து வகை
3. பின்வருவனற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையான தாவரங்களில் காணப்படவில்லை ?
a) 2, 4 D
b) GA3
c) ஜிப்ரல்லின்
d) IAA
4. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச் சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றிற்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
a) முகுளம்
b) பெருமூளை
c) பான்ஸ்
d) ஹைபோதலாமஸ்
5. ஒரு டெசி.லி இரத்தில் காணப்படும் இயல்பான இரத்தச் சா்க்கரையின் அளவு
a) 80 – 100 மி.கி / டெசி.லி
b) 80 – 120 மி.கி / டெசி.லி
c) 80 – 150 மி.கி / டெசி.லி
d) 70 – 120 மி.கி / டெசி.லி
6. சிக்கல் தன்மையில் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைப்பில் கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?
a) மூலக்கூறுகள், திசுக்கள், இனக்கூட்டம், இனத்தொகை
b) செல், திசுக்கள், இனக்கூட்டம், இனத்தொகை
c) திசுக்கள், உயிரிகள், இனத்தொகை, இனக்கூட்டம்
d) மூலக்கூறுகள், திசுக்கள், இனக்கூட்டம், இனத்தொகை
7. கீழ்க்காணும் எந்த உயிரியல் “சுயக்கருவுறுதல்” நடைபெறுகிறது ?
a) மீன்
b) உருளைப்புழு
c) மண்புழு
d) கல்லிரல் புழு
8. பூச்சிகள் வளர் உருமாற்றத்திற்கு உதவும் ஹார்மோன் எது ?
a) ஃபெரோமோன்
b) எக்டைசோன்
c) தைராக்சின்
d) இவற்றில் எதுவுமில்லை
9. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குபின் சில விநாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
a) இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால்
b) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால்
c) இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
d) இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்
10. மூளையிலுள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையத்தை தூண்டுகிறது
a) சிரை இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு
b) தமனி இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு
c) சிரை இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு
d) தமனி இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு
tnpsc model questions paper
11. இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.
A. பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடண் வாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
B. வங்கி இணைப்பு, வங்கித்துறையின் செயல்திறனை உணர்த்தும்.
a) A மட்டும்
b) B மட்டும்
c) A மற்றும் B
d) A மற்றும் B இல்லை
12. பின்வரும் விவசாய முறையில் எது சூழல் நட்பு ?
a) கரிம வேளாண்மை
b) சாகுபடி மாற்றம்
c) அதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடி
d) கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்
13. அத்தி கடவு – அவிநாசி திட்டம் என்பது கீழ் வருவனற்றுள் எதனுடன் தொடர்புடையது ?
a) சொட்டு நீர் பாசன திட்டம்
b) தெளிவு நீர் பாசன திட்டம்
c) குடிநீர் மற்றும் கிணறுகள் செறிவூட்டும் திட்டம்
d) குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
14. கீழ்காணும் நாளிதழ்களில் தந்தை பெரியாரால் துவகக்கப்படாத நாளிதழ் எது ?
a) குடியரசு
b) புரட்சி
c) விடுதலை
d) சுயராஜ்ஜியம்
15. சிலர் ஆணி படுக்கையில் படுத்தாலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் சிறு ஆணி நமது உடலைத் துளைக்கும் போது வலியை உணர்கிறோம் ஏன் ?
a) ஏனெனில் அதன் தொடு பரப்பு சமம்
b) ஏனெனில் அதன் தொடு பரப்பு குறைவு
c) ஏனெனில் அதன் தொடு பரப்பு அதிகம்
d) மேற்கூறிய எதுவுமில்லை
16. வீட்ஸ்டன் சமனச் சுற்றில் மின்கலம், கால்வனா மீட்டர் ஆகியவற்றை இடம் மாற்றினால்
a) மாற்றுவதற்கு முன் சுழிவிலக்கம் பெற தேவையான நிபந்தனையே இதற்கு பொருந்தும்
b) சுழி விலக்கம் பெறத் தேவையான நிபந்தனை மாறும்.
c) சுழி விலக்கம் எப்போதும் பெற இயலாது.
d) அனைத்து கிளைகளிலும் பாயும் மின்னோட்டத்தின் அளவு சுழியாகும்.
17. முன்பக்க இயந்திரம் கொண்ட பின் சக்கர இயக்கி கார்களில் பாதுகாப்பிற்காக தண்டு சுமை குறைப்பது எந்த பகுதியில் ஓட்டுவதற்காக.
a) பனிக்கட்டி சாலைகள்
b) சேற்றுச் சாலைகள்
c) மலைச் சாலைகள்
d) சமதள சாலைகள்
18. கண் கோளத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை நரம்பு எது ?
a) ட்ரோக்கிளியார்
b) அப்டூசன்
c) அக்யுலோ மோட்டார்
d) இவற்றில் எதுவுமில்லை
19. ………….. அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும்.
a) ஹைட்ரஜன்
b) ஒளியின் நீராற்பகுப்பு
c) ஸ்ரோமா
d) தைலக்காய்டு
20. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………..
a) மேட்டூர்
b) பாபநாசம்
c) சாத்தனூர்
d) துங்கபத்ரா
Tnpsc model questions paper
விடைகள் : –
1. b) ஸ்ட்ரோமா
2. a) ‘O’ வகை
3. a) 2, 4 D
4. d) ஹைபோதலாமஸ்
5. b) 80 – 120 மி.கி / டெசி.லி
6. c) திசுக்கள், உயிரிகள், இனத்தொகை, இனக்கூட்டம்
7. d) கல்லிரல் புழு
8. b) எக்டைசோன்
9. c) இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
10. d) தமனி இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு
11. b) B மட்டும்
12. a) கரிம வேளாண்மை
13. d) குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
14. d) சுயராஜ்ஜியம்
15. b) ஏனெனில் அதன் தொடு பரப்பு குறைவு
16. a) மாற்றுவதற்கு முன் சுழிவிலக்கம் பெற தேவையான நிபந்தனையே இதற்கு பொருந்தும்
17. a) பனிக்கட்டி சாலைகள்
18. a) ட்ரோக்கிளியார்
19. a) ஹைட்ரஜன்
20. a) மேட்டூர்
TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 4
TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 6
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT