தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.TNSTC Recruitment 2023
1. பணியின் பெயர் : ஓட்டுநர் உடன் நடத்துநர்
காலியிடங்கள் : 685
வயதுவரம்பு :
- 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/SC/ST) 45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
- முன்னாள் இராணுவத்தினருக்கு 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
- குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
முக்கிய தகுதிகள்:
- செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
உயரம் மற்றும் எடை:
- உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ.
- எடை 50 கிலோகிராம் இருக்க வேண்டும்.
உடல் தகுதி :
- எவ்விதமான உடல் அங்க குறைபாடு (Physical deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்.
- கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
- காது கேட்கும் திறன் குறைபாடு இன்றி இருக்க வேண்டும்.
- இரவுக் குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு இன்றி தெளிவான கண் பார்வை இருத்தல் வேண்டும்.
- வளைந்த கால்கள், முழங்கால்கள் ஓட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடுகள் இன்றி இருத்தல் வேண்டும்.
- சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தம் முறை:
- விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1180 /- ஐ (18% ஜிஎஸ்டி உட்பட) மற்றும் SC / ST பிரிவினருக்கு ரூ. 590 /- ஐ (18% ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பதாரர்கள் இணைய வழிதளம் முறையில் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இணைய வங்கி / பற்று அட்டை / கடன் அட்டை மூலம் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சேவை கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும்.
தேர்வு அனுமதி சீட்டு :
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அனுமதி சீட்டுஇரண்டாம் நி இணைய வழிதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- மேலும் தேர்வாளர்கள் Online மூலம் விண்ணப்பிக்கும் போது தெரியப்படுத்தப்படும் பதிவு எண் (Registration No) விபரத்தை பத்திரமாக குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மேற்படி பதிவு எண்ணை உபயோகப்படுத்தி மட்டுமே தேர்வு அனுமதிச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும்.
Selection Process in TNSTC Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர். அவை,
- எழுத்துத் தேர்வு
- செய்முறைத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
தேர்வு நடைமுறை :
- எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்கள்.
- அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படுவர்கள்.
- வினாத்தாள் தமிழில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
- விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
- எழுத்து தேர்வு பத்தாம் வகுப்பு பொதுத்தமிழ் (50 மதிப்பெண்கள்), பொது அறிவு மற்றும் தொழில்முறை திறனறி தேர்வு (50 மதிப்பெண்கள்) ஆகிய பாடங்களை உள்ளடக்கியது. பொதுத்தமிழ் தேர்வில் கட்டாய தேர்ச்சி (40 சதவீதம் – 20 மதிப்பெண்கள்) அவசியம், பொதுத்தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் தொழில்முறை திறனறி தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்பட்ட மட்டாது. மேலும் ஓட்டுநர் / நடத்துநர் திறன் தேர்வு (நடைமுறை) மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட மட்டார்கள்.
- எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான அரசு விதிமுறைகளின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதி சரிபார்ப்பு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, ஓட்டுநர் / நடத்துநர் திறன் தேர்வு (நடைமுறை – 80 மதிப்பெண்கள்) மற்றும் நேர்காணலுக்கு (20 மதிப்பெண்கள்) உட்படுத்தப்படுவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் மொத்தமாக 150 மதிப்பெண்களுக்குப் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் பெற்ற தொழில்முறை திறனறி தேர்வு மதிப்பெண்கள், ஓட்டுநர் / நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்வேறு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணியமர்த்தப்படுவர்கள். நியமன அதிகாரியால் மட்டுமே ஓட்டுநர் உடன் நடத்துவரகள்குக் பணிமனை ஒதுக்கீடு செய்யப்படும்.
How to Apply for TNSTC Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
TNSTC Driver cum Conductor Recruitment 2023
last date for tnstc driver and conductor post :
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2023
TNSTC Official Notification & Application Link:
TNSTC Official Website Career page: Click Here
TNSTC Official Notification PDF: Click Here
TNSTC Online Application Form: Click Here
குறிப்பு :
- சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.
- விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பக்கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டு திரும்ப வழங்கப்படமாட்டாது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு / செய்முறைத் தேர்வு / நேர்முகத்தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்பட்டமாட்டாது.
- இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
- இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.
- இதர விபரங்கள் போக்குவரத்து கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது. தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகத்திற்கு அதிகாரம் உண்டு.
- சென்னை உயர்நீதிமன்றம் W.P.No.20290 of 2012, நாள்: 27.08.2014 மற்றும் W.A.No.1737 of 2014, நாள் : 20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்